பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

認5() நினைவுக் குமிழிகள்.இ பானம் பருகியது போன்ற உணர்வு இச்செய்தி நல்கியது. * 'இவனைச் சேர்ப்பதற்குப் பல இடங்களில் முயன்று ஏமாற்றமடைந்த எனக்கு இந்தப் பட்டியலை என் கண்ணால் பார்ப்பதற்கு வாய்ப்பு தருவீர்களா?' என்று கெஞ்சும் பாவனையில் கேட்டேன். துணைப்பதிவாளர் என் முகத்தில் படர்ந்திருந்த கவலைக் குறிகளைக் கண்டு கழிவிரக்கம் கொண்டு இரும்பு பீரோவைத் திறந்து பட்டியலை எடுத்துக் காட்டினார். பல்கலைக் கழகப் பகுதி யில் 15 பேருக்கும் துணைவேந்தர் பகுதியில் உ பேருக்கும் இடம் கொடுக்கப்பெற்றிருந்தது; இராமலிங்கத்தின் பெயர் இரண்டில் ஒன்றாக இருந்தது. துணைப்பதிவாள ருக்கு நன்றி தெரிவித்துவிட்டு மாலை ஐந்து மணி இருப்பூர்தியில் திருப்பதிவந்து சேர்ந்தேன். மறுநாளே பையனைக் கூட்டிக் கொண்டு கோவை சென்றேன். ஒர் உணவு விடுதியில் தங்கி நீராடி சிற்றுண்டி கொண்டு P. S. G. கலைக் கல்லூரி சென்றேன். முதல்வர் 1) . K. P. T. வரதராசனைப் பார்த்தேன். அவர், "பட்டியல் வந்து விட்டது. இராமலிங்கத்தின் பெயர் அதில் உள்ளது. ஆனால் துணைவேந்தர் பகுதி தனித் தாளில் தட்டச்சு செய்து பட்டியலில் ஒட்டப் பெற்றிருப்ப தால் ஒரு சிறு ஐயம் தோன்றியுள்ளது. துணைவேந்தர் தில்லி போயிருக்கின்றார். நாளை காலையில் திரும்பு கின்றார். இடம் விஷயமாகத் தன்னைத் தவிர பிறரோடு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளக் கூடாது என்பது துணைவேந்தர் கட்டளை. நாளை தில்லியிலிருந்து திரும்பு கின்றார். முதல் வேலையாக அவருடன் தொடர்பு கொண்டு ஐயத்தைப் போக்கிக் கொள்வேன். இப்போதே உணவு விடுதியில் இடம் தருகின்றேன். பணம் கட்டிச் சேர்ந்து கொள்ளுங்கள். நாளை கல்லூரியில் பணம் கட்டிச் சேர்ந்து கொள்ளலாம்' என்றார். அப்படியே செய்து உணவு விடுதியில் தங்கிவிட்டோம். மறுநாள் கல்லூரியிலும் சேர்த்துவிட்டேன். M. Sc. வகுப்புகள் (இயற்பியல, வேதியியல்) P. S. G. பொறியியல் கல்லூரி