பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்கம் 25】 யில் நடைபெற்றன; அவற்றில் பயிலும் மாணவர்கட்கும் பொறியியல் கல்லூரி மாணவர் விடுதியில் இடம் தரப் பெற்றிருந்தது. படிப்பதற்கு நல்ல சூழ்நிலை; நல்ல சத்துணவு. இயற்பியல் பேராசிரியர் வேங்கடேசுவரலு என்ற ஆந்திரர். மாணவர்களிடம் கண்டிப்பாகவும் இருப்பார்: அன்பும் காட்டுவார். ஒழுங்கு முறையை வற்புறுத்துவார். கல்லூரியிலும் நல்ல சூழ்நிலை. மாணவர் விடுதியிலும் கல்லூரியிலும் சம்பத் என்ற நன் மாணாக்கன் வகுப்புத்தோழனாக அமைந்தான். என்ன ஏற்பாடுகள் இருந்தும், சூழ்நிலைகள் அமைந் திருந்தும் பையன் படித்தால்தானே! சிரமப்பட்டு இடம் வாங்கினதைப் பையன் நன்கு அறிவான். அப்படியிருந்தும் நன்கு படிக்கவில்லை. முதல் ஆண்டில் 4.9 % தான் வாங்க முடிந்தது, 45% வாங்கினால் இரண்டாவது ஆண்டு வகுப்பிற்குப் போகலாம். இரண்டாவது ஆண்டில் பெற்ற மதிப்பெண்ணுடன் முதல் ஆண்டு பெற்ற மதிப்பெண்ணும் சேர்ந்து தேர்வுமுடிவாக அமையும் . இதில் 54% தான் இராமலிங்கத்திற்குக் கிடைத்தது. சம்பத் முதல் வகுப்பில் தேறினான். 54% பெற்றதைப் பற்றி வருந்தவில்லை. நன்கு படிக்காததால் ஏற்பட்ட வருத்தம்தான் இன்னும் இருந்து வருகின்றது. மந்தமதியினன் என்றால் வருத்தம் இராது. கூரிய அறிவுடையவன் இப்படிக் கெட்டானே என்பதுதான் வருத்தம். தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்." என்ற வள்ளுவர் வாக்கின்படி செயற்பட்டேன். ஆனால், மகன்தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல்எனும் சொல்.” என்றபடி பையன் நடந்துகொள்ளவில்லையே. என் 1. குறள்- 67 2. குறள்-70