பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமகிருஷ்ணன் 25。 ஒன்பது, பத்து வகுப்புகளில் நன்கு படித்தான். பள்ளி யின் ஒழுங்கு முற்ையே படிக்க வைத்துவிட்டது. வீட்டு வேலையாகப் பள்ளியில் தரப்பெறும் ஒப்பந்தங்களை (Assigiments) தவறாமல் செய்வதைக் கவனித்துவந்தேன். ஆங்கிலம் பாடமொழியாக இருப்பது ஒருகால் தடையாக இருக்குமோ என்று அஞ்சினேன்; அந்த அச்சத்திற்கு இடம் இல்லாது செய்துவிட்டான். ஆங்கிலமொழியில் நல்ல அறிவு வளர்வதற்கு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தித்தந்தார் பள்ளித் தலைமை ஆசிரியர் திறமை மிக்க சுப்பிரமணியம். பள்ளியில் மாணவன் ஆசிரியர் களோடு பேசும்போதும், மாணவர்கள் தம்முள் ஒருவரோடு ஒருவர் பேசும்போதும் ஆங்கிலத்தைத் தவிர வேறு மொழி யில் பேசக் கூடாது என்ற கட்டாயம் இருந்ததால் மொழி யில் நன்கு பிடிப்பு ஏற்பட்டுவிட்டது. வெகு விரைவில் வகுப்பில் முதல் மாணவனாகத் திகழ்ந்தான். எவ்வளவு மும்முரமாகப் படித்தாலும் எண்பது விழுக்காற்றிற்கு மேல் மதிப்பெண் கிடைப்பதில்லை. வேறு பள்ளிகளில் படிப்பவர்களும், மெட்ரிக் தனியாக எழுதுபவர்களும் 90% க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று வருவதை அறிந்தேன். பாட அறிவு, மொழி அறிவு ஒழுங்குமுறை ஏற்படுவதற்கு நடுவண் அரசு பள்ளிதான் சிறந்தது என்பதை நன்கு உணர்ந்தேன், வேறு சில பள்ளிகளில் 25 % பள்ளியும், 75% பொதுத்தேர்வும் வழங்கு வதைக் கூட்டிப் போடும் வழக்கம் இருந்ததாலும் பள்ளியில் 25க்கு 23 வரையிலும் சிலபாடங்களில் 25-2. பெறும் வாய்ப்பும் இருந்தது. நடுவண் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கட்கு பொறியியல், மருத்துவ இயலில் சேர்வதற்கு முன்னுரிமை அளிக்கப் பெறுவதில்லை என்ற பீதியும் கிளப்பப்பெற்றிருந்தது. இதனால் இராமகிருட்டிணனைப் பள்ளியிலிருந்து விலகிக் கொள்ளக் செய்து மெட்ரிக் தேர்வுக்கு அனுப்ப லாம் எனத் தீர்மானித்தேன். தனிப் பயிற்சிக்கு வசதி இருக்குமா என்று ஆய்ந்ததில் திருப்பதியில் அந்த வாய்ப்பு இல்லை. மூர்த்தி தனிப்பயிற்சிப் பள்ளி என்ற ஒன்று