பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

隸尋濕 . நினைவுக் குமிழிகள்-4 அந்த ஆண்டுதான் தொடங்கினர். அங்கு படிக்கும் சூழ்நிலை சரியாக இல்லை: நல்ல ஆசிரியர்களும் இல்லை. எம்பெருமான்மீது பாரத்தைப்போட்டு நானே எல்லாப் பாடங்களையும் கற்பிப்பது என்ற முடிவிற்கு வந்தேன். தான் தினைத்தால் என்ன பயன்? படிக்க வேண்டியவன் பையன் அல்லவா? 'நான் சொல்லித் தந்தால் படிப்பாயா?" என்று பையனைக் கேட்டேன். பையனும் உறுதியாக ஒப்புக்கொண்டான். பள்ளியில் கிடைக்கும் ஒழுங்கு முறை விட்டில் கிடைக்காதே என்ற அச்சம் ::கு இருந்து கொண்டு தான் இருந்தது அறிவியல் பாடங்களில் கிடைக்கும் செய்முறைப் பயிற்சியும் வீட்டில் ஒவடக்காதே என்ற அச்சமும் இருந்து வந்தது. துணிவே துணை' என்று மன உறுதியுடன் இந்த அக்கினிப் பரீட்சையில் இறங்கினேன். மெட்ரிகுலேஷன் தேர்வு தனியாக எழுதுவதற்கு இசைவு பெறும் விண்ணப்பம் தரும் இறுதி நாள் செப்டம்பர் முதல் தேதி. இதனால் பள்ளியில் படிக்கும் வரை நல்லது என்று ஆகஸ்டு 31 வரை பள்ளியில் படிக்கும் வாய்ப்பைக் கெடுக்கவில்லை. ஆகஸ்டு 31 தேதி விலகுவதாக விண்ணப்பம் தந்து அன்றேசான்றிதழ்கிடைக்கவும்.ஏற்பாடு செய்தேன். செப்டம்பர் 1ந்தேதி தனியாக மெட்ரிக் தேர்வு எழுதுவதற்கு இசைவு பெறும் விண்ணப்பத்தை எல்லா இணைப்புகளுடனும் கட்டணத்துடனும் பல்கலைக் கழகத் தில் சேர்ப்பித்தேன். இதற்கு முன்னரே மெட்சிக் தேர்வுக் ஆரிய பாடத் திட்டங்கள். பாடநூல்கள் இவற்றை அறிந்து தயாராக வைத்துக்கொண்டேன். பழங்காலத்தில் எல்லாப் பாடங்களையும் ஆசிரியரே தம் பிள்ளைகட்குக் கற்பிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் இப்போது இருப்பது போல் ஆங்கிலம், தாய் மொழி, கணிதம், அறிவியல், சமூக இயல் என்றவாறு பாடத்திட்டம் இல்லை. தாய்மொழியில் இலக்கணம்