பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ இராமகிருஷ்ணன் 255 இலக்கியம் இவை மட்டுமே கற்பிக்கப் பெற்றன. துரோணர் போன்ற ஆசாரிய மணிகள் வில்வித்தை, படைக்கலப் பயிற்சி (Military Science) ஆகியவற்றையும் கற்பித்ததாகப் புராண வரலாறு. கண்ணனாகப் பிறந்த பரந்தாமன் சாந்தீபினி என்ற முனிவரிடம் 60 நாட்களில் பயில வேண்டிய அனைத்தையும் கற்றுக்கொண்டதாக வரலாறு உண்டு. இவையெல்லாம் என் மனத்தில் எழுந்தன. மெட்ரிக் தேர்வுக்குரிய எல்லாப் பாடங்களை யும் நானே கற்பிக்கும் திறன் என்னிடம் அமையுமாறு செய்த இறைவனின் கருணைத் திறத்தை எண்ணி எண்ணி வியக்கின்றேன். தமிழ் கற்பிக்கும் எத்தனை பேரிடம் இந்த அரிய திறன்கள் அமைந்துள்ளன என்பது சிந்திக்க வேண்டிய நிலை. மெட்ரிக் தேர்வுக்குரிய பாடங்களில் இந்தியை அவனாகப் படித்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட் டேன். ஏனைய பாடங்களை நானே கற்பித்தேன், அறிவியலுக்கும் சமூக இயலுக்கும் உரிய பகுதிகளில் முக்கியமானவற்றிற்கு சிறுசிறு வாக்கியங்களாக இரவில் நானே எழுதி வைத்துக் கொள்வேன். சமூக இயல் பாடத் திற்கு இரண்டு தாள்கள்; ஒவ்வொன்றுக்கும் மதிப்பெண் 100; ஏனைய பாடங்கட்கு ஒரே தாள்தான்; ஒவ்வொன் றுக்கும் மொத்த மதிப்பெண் 100. சமூக இயலுக்குத் தனிக்கவனம் செலுத்த வேண்டியதாயிற்று. ஆங்கில பாட நூலை எழுத்தெண்ணக் கற்பித்து விட்டேன். இந்நூல் தேர்வு முறையைக் கருத்தில் கொண்டு கற்பிக்கப்பெற்றது. பள்ளியிலேயே அறிவியல் நன்கு கற்பிக்கப்பெற்றதால் அதுபற்றி அதிகக் கவலையில்லை. நல்ல நூல்களும் இருந்தன. சில முக்கியமான பகுதிகள் மட்டிலும் குறிப்புகள் எழுதிக் கற்பிக்கப் பெற்றன. இயற்கணிதமும்(Algebra) வடிவ கணிதமும் Geometry) நானே அதிசயிக்க முறையில் கற்பித்தேன். ஏழெட்டு ஆண்டுகள் உயர்நிலைப் பள்ளி மாணவர்க்குக்