பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器爆载 திணைவுக் குமிழிகள்-4 கற்பித்த அநுபவமும் இருந்ததால் நீரில் குதித்து சாகச விளையாட்டுகளைக் காட்டுவது போன்ற செயலாக அமைத்தது. பையனும் இதில் சிறந்த அக்கறை காட்டினானாதலால் இவற்றை உற்சாகத்துடன் கற் ஜான் . இயற்கணிதத்தில் உள்ள சூத்திரங்களையும் அவற்றின் கீழுள்ள கணக்குகளையும் மிகுந்த உற்சாகத் துடன் கற்றான்; வடிவ கணிதத்தின் தேற்றங்களையும் அவற்றின் கீழள்ள கணக்குகளையும் (Riders) கூட கத்பதில் மிகுந்த அக்கறை காட்டினான். பெரும்பாலான பன்னிகளில் தேற்றத்தின் கீழ்உள்ள கணக்குகளை ஆசிரியர் கற்பிப்பதில்லை. சிந்தனையை வளர்க்கும் இக்கணக்கு களைக் கற்பிப்பதில் ஆசிரியர்கட்கே பொறுமை இருப்பு இல்லை. வடிவ கணிதத்தில் மட்டும் ஐந்நூறுக்கு மேற் பு:. கணக்குகளைக் கற்றான். சமூக இயலில் 20க்கு மேற்பட்ட நான்கு பக்கக் கட்டுரைகள் எளிய முறையில் எழுதித் தந்தேன். அவற்றை மிக தக தாகக் கற்றான்; குடியரசு தலைவர் துணைத் தலைவர் நாடாளு மன்றம் (Parliament) மாநிலங்கள் அவை (Council of State)-இவற்றின் விவரங்கள் எல்லாம் பாடத் திட்டத்தில் இருந்தன. இவற்றை வாய்ச்சொற் களால் விளக்குவதால் பயன் இல்லை என்பதை அறிந் தேன், திசம்பர்-சனவரி விடுமுறையில் (1968-69) ஒரு வாரம் சென்னையில் தங்குவதென்று முடிவு செய்தேன். சட்டசபைக் கூட்டமும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. சபாநாயகர் நுழைவுச் சீட்டுகள் வாங்கிக்கொண்டு ஒருநாள் இருவரும் உட்கார்ந்து கொண் டோம். கட்சிக்குத் தனித்தனியாக இருக்கை வசதிகள் அமைக்கப் பெற்றிருப்பதையும், ஆளும் கட்சிகள் இருப்பு, அமைச்சர்கள் இருப்பு இவற்றையும் விளக்கினேன்.ஒருநாள் மேல் சபை கூட்டத்திற்கும் இட்டுச்சென்று அதன் அமைப்பை விளக்கினேன்; இதற்குத் தனித்தலைவர் (Chairman) உண்டு என்பதையும், அதைக் கூட்டம் தேர்த்