பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமகிருஷ்ணன் 257 தெடுக்க வேண்டும் என்று விளக்கினேன். இதே மாதிரி தில்லியிலுள்ள மக்கள் சபை (Council of State) யின் நிரந்தரத்தலைவர் துணைக் குடியரசுத் தலைவர் என்றும் சுட்டியுரைத்தேன். இங்குள்ள சட்ட மன்றத்தைப் போலவே நாடாளுமன்ற அமைப்பு உள்ளது என்பதையும் எடுத்துரைத்தேன். சட்ட முன்வடிவு (Bill) சட்டசபையில் சமர்க்கப் படும் என்றும், அது விவாதத்துக்கு உட்படுத்தப்படும் என்றும், அப்போதுதான் திருத்தங்கள் நடைபெறும் என்றும் திருத்தப்பட்ட வடிவம் இச்சபையினால் அங்கீ கரிக்கப்பெற்ற பிறகு மேலவை அங்கீகரிக்க வேண்டும் என்றும், அது குடியரசுத் தலைவர் அங்கீகாரம் பெற்ற பிறகு சட்டமாகும் என்றும் விளக்கினேன். இப்படியெல் லாம் விளக்கினதால்தான் பாடத்தின் இப்பகுதி அவனுக்குத் தெளிவாயிற்று. ஒன்றிரண்டு நாட்கள் இப்படி நடப்பதைப் பார்க்குமாறு சொல்லி விட்டு திருப்பதியில் முதுகலைப் படிப்பு தொடங்குவதற்குப் பல்கலைக் கழகம் தந்திருந்த மானியம்பற்றிய விண்ணப்பத்தின் நிலையைக் கவனிப்பதற்கு செயலகத்தினுள் நுழைந்தேன். இப்போது அண்ணா இருந்தார். அவர் திறமை பையன் கவனத்தைக் கவர்ந்தது. அடுத்த ஒன்றிரண்டு மாதங்களில் நோய் வாய்ப்பட்டு விட்டார். இந்தச் சந்தர்ப்பத்தை இதற்குப் பயன்படுத்திக்கொண்டேன். இந்தத் தீவிர முயற்சியின் பலன் 1969-அக்டோபரில் கிடைத்தது. ஆண்டுக்குப் பத்தாயிரம் ரூபாய்வீதம் தருவதற்கு ஆணை பிறப்பிக்கப் பெற்றது. இப்போது முதல் அமைச்சர் அண்ணாதுரை மறைந்து கலைஞர் அந்த இடத்தில் அமர்ந்திருந்தார். இவர் காலத்தில் தான் மானியம் கிடைத்தது. சட்ட மன்றத்தில் கேள்வி நேர நிகழ்ச்சிகளைத்தான் பையன்மிகவும் அநுபவித்தான். துணைக் கேள்வி கேட்கும் எதிர்க்கட்சி உறுப்பினரின் சாதுரியம் ஆளுங்கட்சியினர் சில சமயம்,அவற்றிற்கு விடையிறுக்கமுடியாதுமழுப்புவதையும் தி-17