பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 நினைவுக்குமிழிகள்-4 எதிர்க்கட்சியினர் கைகொட்டி மகிழ்வதும் பையனுக்குச் சொல்விருந்தாக அமைந்தது. மூன்று நான்கு நாட்கள் இந்த நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தான். ஒரு வாரம் சென்னையிலிருந்து விட்டுத் திருப்பதி திரும்பினோம். மார்ச்சு மாதம் (1969) நடைபெற்ற மெட்ரிக் தேர்வு களை மிக நன்றாக எழுதினான். அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி அடைவான் என்று எதிர் பார்த்தேன். உழைப்பின் பயன் காண முடிந்தது. முதல் வகுப்பில் தேர்ந்தான். எல்லாப் பாடங்களில் 75%க்கு மேல் மதிப்பெண்கள் கிடைத்தன; அறிவியல். கணிதம், சமூகஇயல் இவற்றில் 94ஐயும் தாண்டியது. பின்னர் பல்கலைக் கழகத்தில் இவன்தான் முதல் மாணவன் என்ப தும் தெரிந்தது. தேர்வுப் பகுதியிலுள்ள அலுவலர் ஒருவர் கடந்த பதினைந்து ஆண்டுகளில் முதலாவதாகத் தேறின வர்கள் பெற்ற மதிப்பெண்களைவிட இவன் பெற்ற மதிப்பெண் 50க்கு மேல் அதிகம் இருந்ததாகக்கூறியது: எங்கட்குப் பெருமகிழ்ச்சியை அளித்தது. PUC-யின் முதல் வகுப்பில் தேறின முதல் பத்து பேருக்குப் படிப்பூதியம் (Scholarship) &sou şşâl. 3) #56*** மாணவர்களின் பெற்றோரின் மாத வருமானம் ரு 500/-க்கு மேல் இருந் தால் இந்த ஊதியம் கிடையாது. ஆனால் கருத்தியலாக (Notional) ரூ. 100/-ம், சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிப்பு வந்தது. சான்றிதழ் வந்தது: கு. 100|- ஐ ஐதராபாத்தில் யாரோ ஒர் அலுவலர் எடுத்துக்கொண் டார் என்பது ஊகம்; ஆறு மாதம் கடிதப்ப்ோக்குவரத்து நடந்தது; பயன் இல்லை. ' ' '. ஜூன் மாதத்தில் தேவஸ்தான நிர்வாகத்தின்கீழ் இருந்த கலைக் கல்லூரியில் P.U.C.யில் சேர்த்துவிட்டேன். இந்தியை முதல் மொழியாக எடுத்துக் கொண்டான். விருப்ப பாடங்கள் இயற்பியல் வேதியியல் உயிரியல் என்பவை. 1960 தொடங்கி இரண்டு மூன்றாண்டுகளாக ஆசிரியரை வைத்து தாவரஇயல், விலங்கியல் பாடங்