பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமகிருஷ்ணன் 259 களை நான் படித்துக்கொண்டு வந்தேன்-அந்தத் துறை களில் சிறிது அறிவு பெற்றுக் கொள்ளலாம் என்றும் கால் வழி இயவில் (Genetics) அறிவு பெற வேண்டும் என்பதும் என் நோக்கமாக இருந்தது. அதற்கு தாவர இயல், விலங்கு இயல் துறைகளில் அடிப்படை அறிவு தேவைப் பட்டது: இந்த அறிவு இல்லாவிடில் கால்வழி இயலில் தெளிவு ஏற்படாது. இந்த முயற்சி எல்லாம் பி எச்.டிக்குப் பதிவு செய்வதில் முயன்று வந்த காலம். அதில் தடை ஏற் பட்டதால் இந்தத் திசையில் என் முயற்சி சென்றது. கால்வழி இயலில் தெளிவுஏற்பட்டது. வாழையடி வாழை" என்ற தலைப்பில் நூலொன்று எழுதி முடித்தேன். நல்ல நூல். 1968 இல் இதை முடித்தேன். பிஎச்.டிக்குப் பதிவு பெற்று விட்டதால் இந்த நூலை வெளியிடுவதில் முயற்சி எடுக்கவில்லை. இக்காலத்தில் உயிரியலில் பெற்ற அறிவு என் மகனைக் கவனிக்கப் பயன்பட்டது, மெட்ரிக் கற்பித்த காலத்தில் வாரந்தோறும் படித்த வற்றில் ஒரு மணி நேரத் தேர்வுகள் நடத்தினேன். மாதந் தோறும் 2மணித் தேர்வுகட்கு ஏற்பாடுசெய்தேன்.மார்ச்சு மாதத் தொடக்கத்தில் பல்கலைக் கழகத் தேர்வு முறை யில் தேர்வுகள் வைத்தேன். ஒரு ரீம் தாள் வாங்கி வைத்துக்கொண்டு தேர்வுகள் நடைபெற்றன. தேர்வு களினால் பாடங்கள் மனத்தில் அற்றுபடியானதை அளவிட முடிந்தது. இறுதித் தேர்வில் சமூக இயல் பாடத் திற்குரிய விடைத் தாள்களை வரலாற்றுத் துறை பேராசிரிய நண்பர் ஒருவரைக் கொண்டு மதிப்பிட்டேன். அவர் 90 விழுக்காடு மதிப்பெண் வழங்கினார். எம். ஏ. முதலாண்டு மாணவர்களின் நிலையை விட அதிகமான நிலையில் இருந்ததாகக் கூறினார். PUC-யில் படித்தபோது மூன்று அறிவியல் பாடங் களிலும், ஐந்தாண்டுகள் நடைபெற்ற தேர்வுகளின் வினாத் தாள்களைத் (மார்ச்சு-5 தாள்; செப்டம்பர்-க