பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 நினைவுக் குமிழிகள்-4 தாள் ஆக 10 தாள்கள்) தேடி எடுத்து நகல் செய்து வைத்துக் கொண்டேன். இந்தப் பாடங்கள் வகுப்பில் நடைபெறும் போது ஆசிரியர் கரும்பலகையில் எழுதும் குறிப்புகளை அப்படியே எழுதி வரும்படி (தேதியுடன்) என் மகனுக்குச் சொல்லியிருந்தேன்; அவனும் அப்படியே எழுதி வருவான். இந்தகுறிப்புகள், பாடத்திட்டம், தேர்வு வினாக்கள்-இவற்றைக் கொண்டு கற்க வேண்டிய அளவை (Scope) அறுதியிட முடியும். நான் கற்பிக்கும். போது அதிக அளவுக்குப் போகாமலும் குறைந்த அளவுக்கு வராமலும் கற்பிக்க முடிந்தது. அன்றாடம். கல்லூரியில் கற்பித்தவற்றை மீள் நோக்கு செய்வதால் பாடங்களில் தெளிவு ஏற்பட்டது. பாடங்கள் மனத்தில் அற்று படியாயின. வினாத் தாள்களை வைத்துக்கொண்டு. எப்படி எப்படி எல்லாம் வினாக்கள் வரலாம் என்பதை அறுதியிட்டுக் கற்பிக்க முடிந்தது. பையனும் மிக்க ஊக்கத், துடன் கற்றான். PUCயிலும் பல்கலைத் தேர்வுகளில் அறிவியல் பாடங்களில் 85%க்கு மதிப்பெண்கள் பெற. முடிந்தது. பின்னர் முதல் வகுப்பில் 6-வது நிலையில் தேற. முடிந்தது என்பதை அறிந்தேன். மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்குத் தேவைக்கு மேல் மதிப்பெண்கள் பெற்று விட்டான். ஆனால் வேறொரு நிலை உருவாகியது. இதை அடுத்த குமிழியில் தெரிவிப்பேன்.