பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-191 35. அணுக்கரு பெளதிகம் [5ssor காரைக்குடியிலிருந்தபோது ஹெய்ஸன் பெர்க் எழுதிய (Nuclear Physics) என்ற நூலைப் மொழி பெயர்த்துச் சென்னைப்பல்கலைக்கழகப் பரிசு பெற்றேன். {1956). இஃது பல்கலைக்கழகத்தாரால் அச்சுக்கு எடுத்துக் கொள்ளப்பெற்றது (1965). இஃது அச்சிட்ட பிறகுதான் மொழி பெயர்த்த ஆசிரியர்க்குப்பரிசுப்(சன்மானம்) சுமார் ரூ. 500/- வழங்கப்பெறுதல் வேண்டும் என்பது பரிசுத் திட்டத்தின் விதி. மொழி பெயர்த்த கைப்படிக்குப் பரிசே யன்றி அச்சுப்படிக்குப் பரிசு அன்று என்பது சாதாரண அறிவுள்ளவர்க்குக்கூட விளங்காமற் போகாது. இப்படிப் பத்தாண்டு வரை அச்சிடாத குறையின் பலனை மொழி. பெயர்ப்பாளர்தான் அநுபவிக்க வேண்டுமா? இது நியாயந் தானா? அச்சேறுங்கால் பார்வைப் படிகளை (Proofs) மொழி பெயர்ப்பாளர் தான் பார்த்துக் கொடுக்க வேண்டும். இறுதி நிலையில் ஒர் இயற்பியல் பேராசிரியர் தாம் அச்சிட ஆணை தரவேண்டும். இந்த மொழி பெயர்ப்பைப் பரிசீலனை செய்து பரிசு வழங்கும்’ பொறுப் பினையுடைய குழுவின் தலைவராக இருந்தவர் மாநிலக் கல்லூரியின் இயற்பியல் தலைமைப் பேராசிரியர் A. G. நரசிம்மன் என்பவர். 1965இல் இந்தியா அச்சகம் (India Press) argård அச்சகத்தில் அச்சேறியது. (டெமி அளவு) 32 பக்கங்களை (8 பக்கம் உள்ள 4 படிவங்களை) நான் பார்த்துத் தந்தேன்: பேராசிரியர் நரசிம்மன் பார்வை யில் அச்சிடப் பெற்றது. என் தீயூழின் காரணமாக பேராசிரியர் நரசிம்மன் திருநாடு அலங்கரித்து விட்டார். இதனால் அந்தப் பொறுப்பு சென்னை கிறித்தவக் கல்லூரி