பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£62 நினைவுக் குமிழிகள்-4 (தாம்பரம்) இயற்பியல் பேராசிரியரின் தலையில் விழுந்தது. அவர் 8 பக்கம் பார்த்து விட்டுத்தம் இயலாமை யைப் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவித்து விட்டு தம்மை அப்பொறுப்பினின்றும் கழற்றிக்கொண்டார். நூல் 40 பக்கம் அச்சாகி இருந்தது. இந்நிலையில் இறுதியாகப் பார்வைப் படிவம் பார்க் கும் பொறுப்பை பூ.சா.கோ. பொறியியற் கல்லூரியில் இயற்பியல் முதுகலைப் பேராசிரியர் டாக்டர் P. திருஞான சம்பந்தம் அவர்களின் பொறுப்பிற்கு விடப் பெற்றது. அவர் பல்கலைக்கழகத்திற்கு மொழிபெயர்ப்பாளர் இது. காறும் அரசால் வெளியிட்ட கலைச் சொற்பட்டியல்கள், தமிழ்க் கலைக் களஞ்சியத்தில் கையாளப் பெற்றுள்ள கலைச் சொற்கள் இவற்றைப் பயன்படுத்தி மீண்டும் கைப் படியைத்திருத்தி அச்சேற்றவேண்டும்' என்றுஎழுதினார். அந்தக் கடிதத்தின் நகலைப் பல்கலைக் கழகம் எனக்கு அனுப்பி அதன்படி கைப்படியைத் திருத்த வேண்டும். என்று தெரிவித்தது. இவற்றையெல்லாம் பயன்படுத்தி தான் கைப்படி தயார் செய்யத் பெற்றது: இக் கைப்படிக் குத்தான் பரிசும் வழங்கப் பெற்றது. ஆகவே. மீண்டும் திருத்துதல் அவசியமற்ற வேலை. பரிசு வழங்கப்பெற்ற, படியையே அச்சிடவேண்டும். இதனால் 40பக்கம் அச்சான வேலையும் வீணாகாது' என்று எழுதினேன். இக் கடிதம் பேராசிரியர் திருஞானசம்பந்தத்திற்கு அனுப்பப் பெற். றிருத்தல் வேண்டும்; இது குறித்து அவர் என்ன எழுதி னாரோ எனக்குத் தெரியாது. திடீரென்று ஒரு நாள் 'அச்சு வேலையை நிறுத்தி விடுக’’ என்று இந்தியா அச்சகத்திற்கு எழுதி அதன் நகல் எனக்கு அனுப்பப் பெற்றது. பேராசிரியர் ?. திருஞானசம்பந்தம் ஒரு தனியார் கல்லூரியின் இயற்பியல் பேராசிரியர், நானும் பி. எஸ்சி பட்டம்