பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிகம் 26岛” பெற்று (முதல் வகுப்பு-மூன்றாம் நிலை) தமிழ் வித்துவான், எம். ஏ. படித்துத் தனியார் கல்லூரியின் (அழகப்பர் பயிற்சிக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர். இந்நிலையில் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் .ெ க | ண் டி ரு ந் தே ன். அப்போது அறிவியலில் மட்டும் ஒன்பது நூல்களை வெளியிட்டிருந் தேன்; பல துறைகளிலும் அப்போது வெளியிட்ட நூல் களின் எண்ணிக்கை இருபத்து இரண்டு. ஒர் அறிவியல் துறையில் பணியாற்றும் பேராசிரியரை வல்லுநர் என்று கருதும் பல்கலைக்கழகம் அறிவியலும் தமிழும்கற்று 22 நூல் களை எழுதியுள்ள ஒரு தமிழ்ப் போாசிரியரை வல்லுநர் என்று கருதாது ஒரு 'கிள்ளுகீரை' என்று கருதினது துர்அதிர்ஷ்ட வசமானது; வருந்தத் தக்கது. தனியாக ஒரு கடிதம் எழுதாமல் அச்சகத்திற்கு எழுதிய கடிதத்தின் நகலை அனுப்பி வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டது. கடிதம் பெற்றதும் உணர்ச்சி வசப்பட்டேன்; அதை அடக்கிக் கொண்டேன். சென்னை வரும்போது பதிவாளரைப் பார்த்தேன்; நிலையை எடுத்துச் சொன்னேன். அப்போது பதிவாளராக இருந்தவர் B. M. திருங்ாரணன். அவர். "தவறாகக் கையாண்டிருக்கும் ஒர்ஆறு சொற்களை எடுத்துக்காட்டுமாறு பல்கலைக்கழகத் திற்கு எழுதுங்கள். வல்லுநர் மாட்டிக்கொள்வார், பிறகு நிலைமை சரிப்பட்டு விடும்' என்று யோசனை கூறினார். இது வீணான கடிதப்போக்கு வரத்தில் கொண்டுபோய் விடும் என்று கருதினேன். ஆகவே இப்படிச் செய்ய விரும்பவில்லை. துணைவேந்தரைப் பார்த்துப் பேசலாம் என்று முடிவு செய்தேன். அவரைப் பார்த்துப் பேசினேன். அவர் நீங்கள் கோவைக்குச் சென்று அவரைச் சரிப் படுத்திக்கொள்ளுங்கள்’’ என்று கூறினார். நான் உங்கள் பல்கலைக்கழக ஊழியனல்லன் இப்படியெல்லாம் செய்வ தற்கு. பரிசுத் திட்டத்தில் கலந்து கொண்டு பரிசு