பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 நினைவுக் குமிழிகள்-4 பெற்றவனை இப்படியெல்லாம் அலைக்கழிப்பது நியாய மல்ல. திருப்பதியிலிருந்து கோவைக்கு இருவழிப் பயணப் படி அநுமதித்தால் போய் வருகின்றேன். அதுவும் உங்கள் அன்புக் கட்டளைக்காக என்றேன். 'இது குறித்து பல்கலைக்கழகத்திற்கு எழுதுங்கள்’’ என்றார் துணை வேந்தர். அங்ங்ணமே பதிவாளருக்கு எழுதினேன், 'பயணப்படிதர இயலாது” என்று பதிவாளரிடமிருந்து மறுமொழி வந்தது. முதலில் ஒரு வழக்கறிஞரைக் கலந்து (1) பரிசுத் திட்டம் அறிவிப்பு, (2) அதில் நான் கலந்து கொண்டது, (3) பரிசுபெற்றது. (4) அச்சேற்ற 10 ஆண்டுகள் ஆனது, (5) அச்சான பிறகுதான் பரிசு வழங்குவது என்ற அநியாயவிதி, (6) பத்து ஆண்டுகளாக இத்திட்டம் இழு பறியாகக்கிடந்த நிலை, (7) துணைவேந்தரிடம் நேரில் பேசியது, (3) கோவைக்குப் போய்வரப் பயணப்படி மறுப்பு இவற்றையெல்லாம் கூறியும், இந்த நோட்டீஸ் கண்ட ஒரு மாதக் காலத்தில் (1) அச்சான படிவங்கள் (2) அச்சாகாத கைப்படிகள் (3) அச்சுக்கட்டைகள் இவற்றை அனுப்பி னால் நானே நூலைவெளியிட்டுக்கொள்வேன் என்று செப்பியும், இதற்குப் பல்கலைக் கழகம் இசையாவிடில் பரிசையாவது வழங்கிவிடும்படிக் கூறியும் அதற்கும் இசையாவிடில் நீதிமன்றத்தில் நீதி கோரி வழக்கு தொடுப்பதாகவும் நோட்டீஸ் அனுப்பினேன். நான்தான் என் பெயரில் நோட்டீஸ் அனுப்பினேன். ஒரு மாதத்தில் (1) பரிசுத் தொகை, (2) அச்சிட்ட படிவத்தில் இரண்டு, (3) அச்சிடாத கைப்படிகள் முதலியவை என்கைக்கு வந்து சேர்ந்தன. ஒரு சமயம் சென்னை வந்த போது கோட்டையில் (தலைமைச் (செயலகத்தில்) பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தம் செயலாளர், அரசு நூல் வெளியீட்டுக்குழு) அவர்களைச் சந்தித்து இந்த நூலை வெளியிடுமாறு வேண்டினேன்