பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிகம் 墨参毒 அவரும் 'படியை அனுப்பிவையுங்கள்; கவனிக்கின்றேன்" என்றார். அப்போது பேராசிரியர் தெ. பொ. மீ. இந்தக் குழுவின் தலைவர், சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவின் (Syndicate) உறுப்பினர்; மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர். அ. ச. ஞா. கேட்டபடி கைப் படியை அனுப்பிவைத்தேன். இரண்டு திங்கள் கழித்து என் கைப்படி திரும்பி வந்தது- பதிப்பிக்க முடியாமைக்கு வருந்துகின்றோம்' என்ற கடிதத்துடன். அப்போது நானே வெளியிட நினைத்தேன். நிதிவசதி இல்லை. அப்படி இருந்தாலும் பதிப்பித்தால் அம்மாமி கண்டல் விற்கும் கதையாகிவிடும். அறிவியல் நூலை வாங்கிப் படிக்கும் மனப்பான்மை மக்களிடம் இல்லை என்பதையும் அறிந்தேன். தமிழ்ப்புத்தகாலயத்திடம் பரிசுபெற்ற இந்த நூலை வெளியிட முடியுமா? என்று கேட்டேன். அதன் அதிபர் திரு கண. முத்தையா வெளியிடு வதற்கு இசைவு தெரிவித்தார். கைப்படியை அவருக்கு அனுப்பிவைத்தேன். நூலிலுள்ள வரிப்படங்கட்கும் ஒளிப்படங்கட்கும் அச்சுக்கட்டைகள் தயாரிக்கப்பெற்றன. இந்தப் படி அச்சேறும்போது இறுதிப் பார்வைப்படியை ஒர் அறிவியல் பேராசிரியர் பார்த்து ஒப்புதல் தெரிவிக்க வேண்டும் என்ற பல்கலைக் கழக விதிப்படி என் நெருங்கிய நண்பர் இயற்பியல் துறையில் பணியாற்றும் டாக்டர் M. இராதாகிருட்டிணனுக்கு இந்தப் பணியை ஒப்படைத் தேன். இதற்குப் பல்கலைக் கழகம் அனுமதித்த ஊதியம் ரூ. 100/-. இதைப் பதிப்பகத்தாரிடம் வாங்கி என் நண்ப ருக்கு வழங்கினேன். இந்த நூலுக்கு இராஜாஜிக்கு ஒர்ஆங்கில அணிந்துரை வழங்குமாறு கடிதம் எழுதிவேண்டினேன். நான் இராஜாஜியை நேரில் பார்த்துப்பேசவில்லை:முன் அறிமுக மும் இல்லை. காரைக்குடி சென்றிருந்தபோது கம்பன் அடிப்பொடியை அவருக்குப் பரிந்துரைக் கடிதம் எழுதச்