பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

感$娜 நினைவுக் குமிழிகள்-4 செய்ததாக நினைவு. அவர் உங்கள் நூலுக்கு ஒரு பல்கலைக் கழகத்துணைவேந்தர் அணிந்துரை வழங்கினால் சிறப்பாக இருக்கும்; உங்களுடைய எதிர்காலமும் சிறக்க வழி ஏற்படும். இந்தக்கிழவனின் அணிந்துரை உங்கட்கு ஒருவித முன்னேற்றத்தையும் தராது’’ என்று எழுதினார். இந்தப் பரிசுத் திட்டத்தின் கதை படலம் படலமாக என் மனத்தில் எழுந்தன. அழுகை கலந்த சிரிப்புதான் வந்தது. உலகியலறிந்த இராஜாஜியின் அறிவுரை இப்பொழுது இந்த நூலுக்குப் பயன்படாது என்பதை அறிந்தவனாதலால் இத்திசையில் முயல விருப்பம் இல்லை. உடனே அந்தப் பெரிய உயர்குணச் செம்மலுக்கு, "ஐயா, தங்கள் அறிவுரைபடி ஒருபல்கலைத் துணை வுேந்தரை அணுக விருப்பம் இல்லை, மனிதாபிமானமும் பிரச்சினைப் பரிவுடன் அணுகத் தெரியாமல் பொறிபோல் இயங்கும் துணைவேந்தரின் அணிந்துரை என்னை எந்த விதத்திலும் உயர்த்தாது. அவரும் யாரையோ எழுச் சொல்லிக் கையெழுத்திட்டு அனுப்புவார். இந்தக் கபட நாடகப் பாத்திரமாக நடிக்க நான் விரும்பவில்லை. முனிவர்போல் திகழும் உங்கள் அணிந்துரை உங்கள் உள்ளத்தில் எழுந்ததாக இருக்கும். உங்கள் சொற்களாவும். இருக்கும். தள்ளாத வயதில் 4 வரிகள் எழுதினாலும் அவற்றை உங்கள் நெஞ்சம் நெகிழ்ந்த ஆசியாகவும் அணிந்துரையாகவும் கருதுவேன். தயவுசெய்து தாங்கள் தான் அருளவேண்டும்’ என்று வேண்டி எழுதினேன். வேங்கடவன் திருவடி வாரத்தில் வாழும் அடியேனின் வேண்டுகோள் இராஜாஜியின் உள்ளத்தில் பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங்கொண்டவின்' அன்புக் கட்டளையாகத் தோன்றியிருக்க வேண்டும். மறுதபாவில் அஞ்சலட்டையில் அவர் கைப்பட எழுதிய வாசகம் தாங்கிய கடிதம் வந்தது. வாசகம்: "அறிவியல் நூல்களை மொழிபெயர்க்கும் போது மொழிபெயர்ப்பாளரி டையே எழும் இடப்பாடுகளை நான் நன்கு அறிவேன். ஹெய்ர்ன்பெர்க்கின் (Nuclear Physics) என்ற அறிவியல்