பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிகம் 盛67” நூலை மொழி பெயர்த்து அது சிறந்தமொழி பெயர்ப்பு என்பதற்காகப் பரிசு பெற்ற பேராசிரியர்ந.சுப்புரெட்டியா ருக்கு என் நல்வாழ்த்துகள்' என்பது. ஒருதுணை வேந்த அணித்துரையை விட இது பல்லாயிரம் மடங்கு உயர்ந்தது, சிறந்தது என்பது அடியேனின் கருத்து. பதவிமாயமும் பசப்பு வார்த்தைகளும் என்றுமே என்னைக் கவர்ந்ததில்லை; அவற்றின் வலையில் சிக்கவும் இல்லை. எந்த நூலையும் என் உள்ளத்தைக் கவர்ந்த ஒரு பெரியாருக்கு அன்புப் படையலாக்குவது என்பதை ஒரு நியதியாகவே கொண்டிருப்பவன் அடியேன்” இருத நூல் பரிசு பெற்ற வரலாற்றையும், வெளிவருவதில் ஏற்பட்ட சோக நிகழ்ச்சியையும் நன்கறிந்தவர் தெ.பொ.மீ. தமிழ் வளர்ச்சியில் சிறந்த ஆவேசம் கொண்டவர். உயர்ந்த உள்ளம் படைத்த சீலர். மதுரைப் பல்கலைக் கழக முத்ல் துணைவேந்தர். இந்தப் பெருந்தகைக்கு, சீலமார் தமிழ்த்தாய் புரிதவத் துதித்தோன்; செவ்விய நல்லுளச் செம்மல்: ஞாலமாம் கனியின் சாறெனத் தக்க நன்மொழி பலபல சுவைத்தோன்; கோல மார் மதுரைப் பல்கலைக் கழகக் கோயிலின் முதல்துணை வேந்தன்; தாலமீ தோங்குமீ னாட்சிகந் தரனார் தாள்மலர்க் குரியதிந் நூலே. 1. Foreword; “I can understand the difficulties of a tranolator of scientific books and I tender my congratulations to Prof. N. Subbu Reddiar on his having won the prize for the best translation of Heisen berg’s Nuclear Physics” - C. Rajasopa lachari, Gargör 696Ar 28-3-1966