பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 - நினைவுக் குமிழிகள்.4 என்ற பாடலின் மூலம் அன்புப் படையலாக்கும் பேறு பெற்றேன். நூலும் ஆயுதப் பிரசவம்போல் வெளிவந்தது. குழந்தையும் பிழைத்து வளர்ந்து உலகில் நடமாடுவது போல் இந்த நூலும் அறிஞர்களிடையே தவழ்ந்து தளர் தடை போட்டு மகிழ்வித்திருக்கும் என்று நம்புகின்றேன். என்னை விஷப் பரீட்சைக்கு உட்படுத்தும் எம்பெருமான் என் நூலையும் அந்தப் பரீட்சைக்கு உள்ளாக்கினானே என்று அவன் பெருங்கருணைத் திறத்தைப் போற்று கின்றேன். யமகண்டத்திற்குத் தப்பி உயர்ந்த காள மேகப் புலவரை நினைத்துச் கொள்கின்றேன். ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்." என்று வள்ளுவர் கூறும் தாயின் அநுபவம் இலக்கியத்தைப் பிறப்பிக்கும் ஆசிரியர்க்கும் உண்டு என்பதையும் சிந்திக் கின்றேன். இஃது என்னுடைய பத்தொன்பதாவது வெளியீ டாகும் (ஜூலை 1966), 2. குறள்-69 (மக்கட்பேறு)