பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-192 36. இளைஞர் தொலைக்காட்சி தோற்றம் புத்தம் புதிய கலைகள்-பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே-அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை." என்று அந்தப் பேதை 'உரைத்ததை எண்ணித் தமிழ்த்தாய் இந்த வசை எனக்கு எய்திடலாமோ?’ என்று ஏங்குவ தாகக் கற்பனை செய்கின்றார் புதுமைக் கவிஞர் பாரதியார்.தமிழ்த்தாய்க்கு அந்தக் குறை-அந்த ஏக்கம்இல்லா தொழியச் செய்வது இன்றைய தமிழ் அறிஞர் களின்-அறிவியலறிஞர்களின்-கடமை. இதற்கு வேண்டிய அறிவியல் கலையறிவு இளமையிலிருந்தே இளைஞர் களிடம் அமையச் செய்தல் வேண்டும். அதற்குரிய ஆர்வம், அவா, விடுப்பூக்கம் (Curiosity) அவர்களிடம் கிளர்ந்தெழச் செய்தல் வேண்டும். அறிவியல் படித்தவர்கள் இதனை ஒரு முக்கிய பணியாக ஏற்கவேண்டும். சொல்லுந்திறமை (Expressive ability) தமிழ் மொழிக்கு அமைய வேண்டு மாயின் தமிழ் பயிற்று மொழியாக அமைந்து தமிழிலேயே அறிவியற் கலைகள் எழுதப்பெறல் வேண்டும்; வகுப்பு களிலும் விளக்கம் பெறுதல் வேண்டும். இந்த வித முயற்சி களின்றித் தமிழ் மொழியில் அறிவியற் கலைகள் தோன்ற வேண்டும் என்று மேடையில் முழக்கம் செய்வது வெறுங் கையால் முழம் போடுவது போலாகும்; மனக் கோட்டை கட்டுவது போலாகும். --سمعہمس-سے 1. பா.க: தமிழ்த் தாய்-9