பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 நினைவுக் குமிழிகள்-4 இவ்விதமான சிந்தனையில் நான் ஈடுபட்டிருக்கும் போது பாவேந்தர் பாரதிதாசன் சஞ்சீவிபர்வதத்தின் சாரல்’ என்ற கவிதையைப் படிக்க நேர்ந்தது. அம்மலை யில் குப்பனும் வள்ளியும் என்ற காதலர்களைச் சந்திக்க விடுகின்றார் கவிஞர். அங்கு இரண்டு மூலிகைகள் இருப்ப தாகக் கற்பனை செய்கின்றார். மூலிகைகளின் மகிமை யைக் குப்பன், ஒன்றைத்தின் றால் இவ் வுலகமக்கள் பேசுவது நன்றாகக் கேட்கும்மற் றொன்றைவா யில்போட்டால் மண்ணுலகக் காட்சிஎலாம் மற்றிங் கிருந்தபடி கண்ணுக் கெதிரிலே காணலாம்." என்று வள்ளிக்குக் கூறுகின்றான். இந்த அடிகளைப் படித்த எனக்கு வானொலியும் தொலைக்காட்சியும் நினைவிற்கு வந்தன. ஒரு மூலிகை வானொலியை உணர்த்துவதாகவும். மற்றொரு மூலிகை தொலைக் காட்சியைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். இங்ங்ண்ம் கவிஞர்களிடம் தோன்றிய கற்பனைதான் நாளடைவில் அறிவியலறிஞர்களின் ஆராய்ச்சிகள்மூலம் புதுப்புனைவு களாக (Inventions) வடிவெடுத்தது என்று கொள்வதில் தவறொன்றும் இல்லை. இந்தப் பெரும் பணியில் நான் தனியாக இறங்குவது அணிலின் செய்கை போன்றது. இராமன் சேது.கட்டும் போது ஒரு சிறு அணில் மணலைவாரி அணையில் போட்ட தைத் தொண்டரடிப் பொடியாழ்வார்’ குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத்தாம் புரண்டிட் டோடித் தரங்கநீர் அடைக்க லுற்ற சலமிலா அணிலும் போலேன்.” 2 . சஞ். சாரல்-அடி(43-46) 3. திருமாலை-27