பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர் தொலைக்காட்சி தோற்றம் 271 என்று பேசுவார். இந்தப் பெரும் பணியில் அணிலின் பங்கு எவ்வளவோ அவ்வளவுதான் என்னுடையது. அறிவியல் நூல்களைத் தமிழில் எழுதும் என் பங்கும் குரங்குகள் அணை கட்டியதில் ஈடுபட்டதுபோல் எல்லா நிலையிலும் அறிவியலில் பட்டம் பெற்றவர்கள் இதனைத் தம் வாழ்க்கையின் பெரும்பணியாகக் கருதி இதில் ஈடுபடவேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பது கவிஞரின் வாக்கு; இது நம் வழியில் ஒளி காட்டுவதாக, இருக்கட்டும். வானொலியும் தொலைக்காட்சியும் எலக்ட்ரானிக் சகோதரிகள். அவர்களில் ஒருவரைச் செவி மடுத்தியார் (Miss Audible) என்றும் மற்றொருவரைக் கண்ணம்மையார (Miss Visible) என்றும் வழங்கலாம். மானிடச் சகோதரி களைப் போலவே இவர்களிடமும் பொதுவான பண்புக் கூறுகள் (Traits) அமைந்துள்ளன. ஆனால் இவர்களது நடத்தையில்தான் பேரளவில் வேற்றுமை உள்ளது. இன்று நமது நாட்டில் உள்ள எல்லோருக்கும் அறிமுகமான செவிமடுத்தியாரைப் பற்றி நாம் ஓரளவு நன்குஅறிவோம் -இளைஞர் வானொலி'யை’ அறிமுகம் செய்த போது இவளது தத்துவம், இவள் இயங்கும் முறை போன்ற செய்திகள் தெரிவிக்கப் பெற்றுள்ளன. இவளுடைய சகோதரியாகிய கண்ணம்மையார் இப்போது நம் நாட்டில் வேகமாக அறிமுகமாகி வருகின்றாள். தொலைக்காட்சியில் தொலைவில் நடைபெறும் நிகழ்ச்சியின் ஒலியையும் கேட்கலாம்; அங்கு நடைபெறும் நிகழ்ச்சியின் காட்சிகளை யும் கண்ணுறலாம். இரண்டிலும் நிகழ்ச்சிகளை அனுப்புவதற்கு வானொலி அலைகள்’ என்று வழங்கப்பெறும் மின்காந்த அலைகளே 4. இது என் 15-வது வெளியீடு. (குமிழி-169 பக்கம்.115)