பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盡寶葛 நினைவுக் குமிழிகள்-4 பயன்படுகின்றன. இந்த அலைகள் வினாடியொன்றுக்கு ஒ97600 கி.மீ. வீதம் செல்லுவதால் இவற்றின் மூலம் ஒருசிலிருந்து அனுப்பப்பெறும் நிகழ்த்தின் அடுக்கக் கணமே அடுத்த ஊரை அடைந்து விடுகின்றன. அந்த ஊர் எவ்வளவு தொலைவிலிருப்பினும் அங்குள்ளவர்கள் இருந்த இடத்திலிருந்து கொண்டே உடனுக்குடன் நிகழ்ச்சிகளைக் கண்டும் கேட்டும் அநுபவிக்கின்றனர். வானொலி ஒலிபரப்பில் தொடக்கத்திலும் இறுதியிலும் ஒலி அலைகள் தோன்றுகின்றன. ஒவி அலைகளாகத் தொடங்கி, மின் அலைகளாக மாறி, மீண்டும் ஒலி அலை களாக மாறுவதே ஒலிபரப்பு நிகழ்ச்சியாகும். ஆனால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பரப்புவதில் ஒளிக்கதிர் களைப் பயன்படுத்துகின்றனர். ஆதலால் இந்த நிகழ்ச்சி கள் ஒளிக்கதிர்களாகத் தொடங்கி, மின்சார அலைகளாக மாறி, திரும்பவும் ஒளிக்கதிர்களாகத் தோன்றுகின்றன. இதனை நாம் ஒளிபரப்பு என்று வழங்கலாம். ஒளிபரப்பு நிகழும் இடத்தில் நடைபெறும் இசைவிருந்து, நாடகம், வயலும் வாழ்வும் போன்ற செயல்கள் திரும்பவும் ஒளி பரப்பினை ஏற்கும் இடத்திலும் நடத்தப் பெறுகின்றன. ஆனால், இவை நடத்தப் பெறும் வரிசை முறை மட்டிலும் தலைகீழாக இருக்கும். ஒளிபரப்பும் இடத்தில் நடைபெறும் செயல்களை 1, 2, 3 என்று பெயரிட்டால் அவை ஏற்கும் இடத்தில் 3, 2, 1 என்ற வரிசை முறையில் நடை பெறும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்கு அனுப்புவதில் மூன்று கட்டங்கள் உள்ளன. முதலாவதாக, தொலைக்காட்சிப் படமாக வேண்டிய நிகழ்ச்சியை, அல்லது பொருளை, துருவிப் பார்த்தல் (Scanning) என்ற நிகழ்ச்சிக்கு உட்படுத்த வேண்டும். இரண்டாவதாக, இவ்வாறு நிகழ்த்திய செயலால் கிடைத்துள்ள ஒளித்துடிப்புகளை மின் துடிப்பு களாக மாற்றுதல் வேண்டும். மூன்றாவதாக, இந்த மின்