பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர் தொலைக்காட்சி தோற்றம் 273 துடிப்புகளை மீண்டும். ஒளித் துடிப்புகளாக மாற்றி வேண்டும். இவ்வாறு மாற்றும்பொழுது முதலில் கண்ட நிகழ்ச்சி அல்லது பொருளின் பிம்பம் திரும்பவும் படைக்கப் பெறக் கூடியதாக இருத்தல் வேண்டும். முதலிரண்டு கட்டங்களையும் ஒளிபரப்பு நிலையம் கவனிக்கின்றது. மூன்றாவது கட்டம் நிகழ்ச்சிகளை ஏற்கும் கருவியில் நிறைவேறுகின்றது. இதுவே தொலைகாட்சி இயங்கும். முறையாகும். - - இம்முறையை அறிந்து கொள்ள வேண்டுமானால் ஒளியின் தன்மைகள், கண்ணின் குணங்கள், மின்னணுக் குழல்கள், தனி மின்சாரமாதல், தொலைக்காட்சிக் காமிரா, தொலைக்காட்சிப் படங்கள், வாகன அலைகள், நம்முடைய தொலைக்காட்சிப் பெட்டி இவைபற்றிய செய்திகளை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் விளக்கிய பின்பு தொலைக்காட்சி செயற்படுவது தெளிவாக்கப் பெறுகின்றது. வானொலி நிலையத்திலுள்ள நமது உள்ளங்கை யகலமுள்ள ஒலி வாங்கியின் வாய் மண்ணைத் தின்கின்ற கண்ணன் வாய் போல் உலகனைத்தையும் உண்டு உமிழும் வாயாக அமைந் துள்ளது. அங்ங்ணமே தொலைக்காட்சி நிலையத்தில் நமது கேண்ணை விட மிகவும் சிறியதாகவுள்ள ஒளி மின்சாரக்கலம் என்னும் மாயக்கண் இந்த எல்லையற்ற அகிலம் முழுவதையும் ஊடுருவிப் பார்க்க வல்லதாக அமைந்துள்ளது’’’ முன்னது உலகனைத்தையும் செவி சாய்த்துக் கேட்கின்றது. பின்னது உலகம் முழுவதையும் ஏறிட்டுப் பார்க்கின்றது. இந்தசி சிறு நூலை அணுவாற்றலை மக்கள் நலனுக் குப் பயன்படுத்த வேண்டுமென்று சொல்வதற்கு நம் நாட்டுத் தூதராக அமெரிக்கா சென்று வந்தவுடன் இராஜாஜி அவர்கட்கு, இளைஞர் தொலைக்காட்சி-பக் (101-102) நி-18