பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多?4 நினைவுக் குமிழிகள்-4 மல்லிகை மலர்போல் தூயவன்; வேத வரம்புறும் உபநிட தத்தில் சொல்லிய பொருளை ஆய்ந்தவன்; சிறுமைச் சூழலில் புகாப்பெரு நடையன்: நல்லியல் கலைஞன் சிலசொல்லால் சான்றோர் நன்மனம் கவர்ந்தவன்; அஞ்சா வல்லிய மனைய வீர ராஜாஜி மலர்ப்பதத் தொளிர்கஇந் நூலே. என்ற பாடலின் மூலம் அன்புப் படையலாக்கி மகிழ் கின்றேன். இவரைப் பற்றி இந்நூலின் நூல் முகத்தில் வைத்த குறிப் இது: 'நமது இராஜாஜி அவர்கள் உலகப் பேரறிஞர்களில் ஒருவர்; உயர்ந்த சிந்தனையாளர். நம் நாட்டு விடுதலை இயக்கத்தில் பெரும் பங்கு கொண்டவர். எதிலும் பகுத்தறிவு வழியைக் கடைப்பிடிப்பவராயினும், நம்பிக்கையின் உருவமான உத்தம சீலர். காலத்தொலை வில் நடை பெற வேண்டியவற்றை முன்னரே கணித்துக் காட்டவல்ல ஆழ்ந்த பெரு நோக்குடையவர். 'இடத் தொலைவில்’ நடைபெறுவனவற்றை உடனுக்குடன் காணவல்ல தொலைக் காட்சிச் சாதனத்தை விளக்கும் "இளைஞர் தொலைக்காட்சி' என்னும் இந்நூல் பாரதத்தின் முதல் இரத்தினமாகிய அவரது எண்பத்தெட்டாவது ஆண்டு கினைவினைப் பாராட்டும் மலராக வெளி வருகின்றது. அவரது ஆசியைப் பெற்றுத் தமிழ்நாட்டுச் சிறுவர்களின் கைகளை அடையும் இந் நூல் அவர்கட்குச் சிறந்த அறிவிய லறிவினை நல் ம் என்பது உறுதி. '? கழக வெளியீடாக வந்த இந்த நூல் என்னுடைய இருபதாவது வெளியீடாகும். (திசம்பர்-1966).