பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-193 37. அறிவியல் விருந்து அவதாரம் 1966-நவம்பரில் என நினைக்கின்றேன். என்னு டைய இலக்கியக் கட்டுரைகளில் சிலவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட்டது போல் அறிவியல்பற்றி எழுதிப் பல்வேறு இதழ்களிலும் ஆண்டு மலர்களிலும், பெரியார் களின் மணிவிழா மலர்களிலும் வெளிவந்த கட்டுரைகளை வெளியிட நினைத்தேன். அன்று வரை பத்துக் கட்டுரைகள் தேறின. அறிவியலைப் பயிலாதவர்களும் அறிவியலில் இன்றியமையாத செய்திகளை அறிந்து கொன்ள வாய்ப்பளிக்க வேண்டும்': தமிழ் மரபு குறையாமல் எளிய முறையில் மக்களுக்கு அறிவியல் செய்திகளைத் தெளிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் எழுதப் பெற்றவை இக்கட்டுரைகள். பல்வேறு இடங்களில் சிதறிக் இடக்கும் கட்டுரைகளைத் தொகுத்துப் பார்க்கும் வாய்ப்பும் கட்டுரை ஆசிரியருக்குக் கிடைக்கின்றது. இதனால் பல்வேறு காலங்களில் பல்வேறு நிலைகளில் :புத்தம் புதிய கலைகளைத் தமிழுக்குக் கொணர்ந்த முயற்சியையும் எடை போட்டுப் பார்க்கும் நிலையும் ஏற்படுகின்றது. இந்தக் கட்டுரைகளின் தொகுப்புக்கு அறிவியல் விருந்து என்ற திருநாமமும் இட்டேன். இஃது என்னுடைய இருபத்தொன்றாவது வெளியீடாகும். (மே-1967) இந்தத் தொகுப்பில் அடங்கிய கட்டுரைகள்; 1. பொங்கலும் அணுவும் (தமிழ்ச் செல்வி), 2. அணு வின் அளப்பரிய ஆற்றல் (சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழக 1008-வது வெளியீட்டு விழா மலர்), 3. குடி