பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 நினைவுக் குமிழிகள்-4 வழியும் சூழ்நிலையும் (தமிழ்ச் செல்வி), 4. மின்னலும் இடியும் (செந்தமிழ்ச் செல்வி); 5. ஞாயிற்றுக் குடும்பம் (தனியாக எழுதப் பெற்றது): 8. மதிமண்டலச் செலவு (பேராசிரியர் ஆர். கே. விசுவநாதன்) மணிவிழா மலர்),கதிரியக்க ஓரிடத்தான்கள் (அணுக் கதிர்) 8. நனவிலி மனம் (செந்தமிழ்ச் செல்வி); 9. தொல் பொருட்கலையில் புதிய ஆராய்ச்சி முறை (கலைக் கதிர்); 19. எதிர் கால அறிவியல்) பத்தாவது வகுப்பு பாடநூலில் உரை நடைப் பகுதிக்காக எழுதப் பெற்றது) இவை அறிவியல் துறையில் பல்வேறு புலங்களைப் (Faculty). பற்றியவை என்பது தெளிவு. சாதாரணமாக ஒரு கட்டுரை யைச் சிந்தித்து உருவங்கொடுத்து எழுதுவதற்குப் பதினைந்து நாட்களாகும்.அதுவும் அறிவியல் கருத்துகளை எடுத்துச் சொல்வதில் பொருட் பிழையின்மை, பழகு தமிழில் தெளிவாக எழுதுவதில் நேரிடும் இடர்ப்பாடுகள் இவற்றை இப்போது நினைந்து பார்க்கும்போது ஓரளவு நான் பட்ட சிரமத்தை எடைபோட்டுப் பார்க்க முடிகின்றது. நான் திருப்பதியிலிருந்து கொண்டு இந்நூலை வெளியிடுவதென்பது குதிரைக் கொம்பாக இருந்தது. அஞ்ஞாத வாசத்தில் எவர் என்னை நினைவு வைத்துக் கொள்வார்கள்? ஏற்கெனவே இல்லற நெறி' என்ற நூலை வெளியிட்டு அதனால் எனது அறிவியல் ஆற்றலையும் அது எனது. "இல்லற நெறி நடைமுறையில் பெற்றுத் தந்த புகழை யும் நினைந்து தமிழ்ப் புத்தகாலயம் என்ற நிறுவனத்தின் அதிபர் திரு. கண. முத்தையா இதனை மனமுவந்து ஏற்று வெளியிட முன் வந்தார். நூலும் மே, 1967 இல் வெளி: வந்தது. தமிழ் மொழியால் அளவற்ற காதலும் அம்மொழி' யில் பெரும் புலமையும் அடைந்து மிகுபுகழ் பெற்ற என் கெழுதகை நண்பர் பேராசிரியர் அர். சு. நாராயணசாமி நாயுடு அவர்கள்(முதல்வர் ஜி.வேங்கடசாமி நாயுடு கல்லூரி, கோவில் பட்டி, மதுரை மாவட்டம்).