பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் விருந்து அவதாரம் 377 இதற்கு அரிய தோர் அணிந்துரை நல்கி இந்நூலைச் சிறப்பித்தார். அணிந்துரையில் இப்பேராசிரியர் கூறுவது; அறிவியல் விருந்து என்னும் நூலினை அணுவின் கூறுகளாகிய அரிசி, அணுவின் ஆற்றலாகிய மிளகு, குடிவழியும் சூழ்நிலையும் என்னும் புளி ஈருள்ளி, மின்னலும் இடியும் என்னும் பச்சை மிளகாய், ஞாயிற்றுக் குடும்பம் என்னும் காய்கறிகள், மதி மண்டலச் செலவு' என்னும் மஞ்சட் பொடி, கதிரியக்க ஒரிடத்தான்கள் என்னும் தாளிதப் பொருள் இவைகளை அளவறிந்து, பொழுதறிந்து, சேர்த்தாக்கித் தொல் பொருட்கலையில் புதிய ஆராய்ச்சி முறை என்னும் நெய்யிலே யிட்டு, நனவிலியுளமாகிய மசாலாப் பொருள் சேர்த்து, எதிர் காலத்தில் அறிவியல்என்னும் ஊறுகாயோடு சுவைத் துண்டு மகிழ்ச்சி யேப்ப மிடச் செய்துள்ளார். இவ்வறிஞர். அறிவுக்குச் சத்துட்டும் நல்லுணவு இது. பழமையையும் புதுமையையும் கலந்து மாறுபாடில்லா உண்டி நல்கியுள்ளார்' என்பது. 'இந்நூலிலுள்ள கட்டுரைகளைப் பாராட்டி உரைத்த வின்றி மதிப்பிட்டுரைத்தல் என்பது எளிதன்று. ஒவ்வொரு கட்டுரையும் அறிவியலாகிய மாற்றுயர்ந்த தங்கத்தா லியன் ) பழமையாகிய மணிகள் குயிற்றி இடப்பெற்றுப் பேரழகோடு திகழ்கின்றது. ஆங்கிலமும் அதனையொத்த அறிவியல் புதுமைகளை அளந்து கூறும் மொழிகளும் அறியாத தமிழரும் இறுபதாம் நூற்றாண்டின் இறுமாப்புக் குரிய அறிவியற் செய்திகளையறிந்து நனவில் நினைந்து கனவிலும் தொடர்ந்து மகிழுமாறு உதவியுள்ளார் 1. இக்கட்டுரை இரண்டாம் பதிப்பில் (மே, 1981) அறிவியலின் புதிய போக்குகளையொட்டி மாற்றி எழுதப் பெற்று அம்புலிப் பயணம்' என்ற தலைப்பில் சேர்க்கப் பெற்றுள்ளது .