பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 நினைவுக் குமிழிகள்-4 பேராசிரியர். அம்மொழிகளை அறிந்தாரும் எளிதிலே சிக்கலின்றித் தெளியுமாறும் அமைந்துள்ளது அறிவியல் விருந்து’’. இந்த அரசு நாராயணசாமி நாயுடு யார்? நான் துறையூரில் தலைமை யாசிரியனாகப் பணியாற்றிய காலத்திலோ அதற்கு ஓரிரண்டு ஆண்டுகட்கு முன்போ (அதாவது 1940-1943 காலத்தில்) திருவையாற்றில் வித்துவான் பயின்று சிறந்த மாணாக்கராகத் திகழ்ந்து வித்துவான் தேர்வில் முதல் நிலையில் முதல்வராகத் தேறி ரூ. 1000/- பரிசு பெற்றவர். அதன் பிறகு திருப்பதி கீழ்த் திசைக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகச் சேர்ந்து பணியாற்றியவர். அப்போதுதான். B. O, L., M. A. முதலிய பட்டங்களைத் தனியாகப் பயிற்று பெற்றுத் திருப்பதியில் கலைக்கல்லூரித் தொடங்கப் பெற்றபொழுது அதில் துறைத் தலைவராகப் பணியாற்றியவர். சில ஆண்டு கட்குப் பிறகு விருது நகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகச் சேர்ந்தவர். இந்தக் காலத்தில் நான் காரைக்குடி அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியனாகச் சேர்ந்து பணி யாற்றினேன். இக்காலத்தில் விருதுநகருக்கு ஏதோ ஒரு சொற்பொழிவுக்குச் சென்றிருந்த பொழுது இவரைச் சந்தித்து அளாவளாவியதுண்டு. அக்காலத்தில் மனைவியை இழந்து தனிமை வாழ்க்கை நடத்தியவர். இவருடைய மகளும் மகனும் கோவையில் கல்வி பயின்றதாகச் சொன்ன தாக நினைவு. நான் 1953-56 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் கல்வி ஆலோசனைக் குழுவிலும், பேரவையிலும் உறுப்பினராகப் பங்கு பெற்றிருந்த காலத்திற்கு முன் 1950-53ல் என்பதாக நினைவு) மூன்றாண்டுக் காலத் தில் இவர் இந்த இரண்டு அவைகளிலும் பல தீர்மானங் களை வைத்துப் போராடியதாக என்தோழ ஆசிரியர்கள் சொன்னதாகக் கேள்வியுற்றிருக்கின்றேன்.