பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"அறிவியல் விருந்து அவதாரம் 279 நான் காரைக்குடியை விட்டுத் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பணியாற்றிய காலத்தில் திருநாயுடு அவர்கள் கோவில்பட்டி ஜி. வேங்கடசாமி நாயுடு கல்லூரியில் முதல்வராகச் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மூன்றாண்டுக் காலம் திருவேங்கடவன் பல்கலைக்கழகத் தமிழ் பாடத்திட்டக் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றியவர். நான் திருப்பதியில் சேர்ந்த நாள் முதல் பேராசிரியர் பூ, ஆலால சுதரந்ஞ் செட்டியார் (சென்னை-தாம்பரம் கிறித்தவக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்), பேராசிரியர் கோ. சுப்பிரமணியப் பிள்ளை (தமிழ்ப் பேராசிரியர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம்) ஆகியோர் உறுப்பின ராகப் பணியாற்றினார்கள். இக்காலத்தில் திரு. வேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ் எம். ஏ. தொடங்கப் பெறவில்லை. 1970-71 முதல்தான் த ழ் எம். ஏ தொடங்கப் பெற்றது: பிஎச். டி பட்ட ஆய்வுக்கும் வழியமைந்தது. பேராசிரியர் நாயுடு அவர்கள் முதல்வ ராகப் பணியாற்றியபொழுது அக்கல்லூரி மதுரைப் பல்கலைக் கழகத்தில் இணைந்திருந்தது. அப்போதுதான் 1962-முதல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த டாக்டர் மு. வரதராசன் 1971-முதல் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரானார். இவர் 1974ல் திருநாடு அலங் கரிக்கும் காலம் வரையிலும் என் வேண்டுகோட்கிணங்கத் தொடர்ந்து திருவேங்கடவன் பல்கலைக்கழகத் தமிழ்ப் பாடத்திட்டக் குழுவின் தலைவராக இருந்து வந்தார். இவ்வாறு இவரை வேண்டிக் கொண்டதற்குக் காரணம் உண்டு. இது பிறிதொரு குமிழியில் விளக்கம் பெற்றுள்ளது. பேராசிரியர் நாராயணசாமி நாயுடு சிறந்த புலவர்; நேர்மை தவறாதவர். பெரிய இடத்தில் தவறுகள் நிகழ்ந் தாலும் துணிவுடன் எடுத்துக்காட்டிப் போராடுபவர். மாணாக்கராக இருந்த காலத்தில் எங்களூர்ப் பக்கத்