பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛8伊 நினைவுக் குமிழிகள்.4 திலிருந்து பயின்ற திரு. W.C. கிருஷ்ணசாமி, திரு. C, முத்து கல்லப்ப ரெட்டி, திரு. ஆ. சாம்பசிவம் போன்ற வர்கள் (இவர் காலத்தில் உடன் பயின்ற ஒரு சாலை மாணாக்கர்கள்). இவருடைய புலமை, சுறுசுறுப்பாக இயங்கும் தன்மை, நேர்மைக்காகப் பேராடும் பண்பு. தோழர்களுடன் அன்புடனும் பாசத்துடனும் பழகும் சீர்மை முதலிய அருங்குணங்களை எடுத்துக் காட்டியமை இப்போது நினைவுக்கு வருகின்றது. திருப்பதி, விருது நகர், கோவில்பட்டியில் பணியாற்றிய நண்பர்கள் மூலமும் இவருடைய அரும்பெருங்குணங்களைக் கேள்வியுற்றிருக் கின்றேன், டாக்டர் மு. வ. அவர்கள் தில்லு முல்லு அறியாத பெரும் புலவர்' என்று சுருக்கமாகச் சொல் வார். இப்பெருமகனார் டாக்டர் அ. சி. செட்டியார் மரணமடைந்த வரலாற்றைக் காதோடு காதாக என்னிடம் சொல்லியதுண்டு. டாக்டர் மு. வ. துணைவேந்தராக இருந்த காலத்தில் பேராசிரியர் நாயுடு முதல்வர். அப்போதுதான் இவர் திருதாடு அலங்கரித்தார். மறைந்த சில நாட்களில் திருப்பதிக்கு பாடத்திட்டக்குழு கூட்டத் திற்கு வந்திருந்த எக்டர் மு. வ. தான் மேற்கூறியவாறு அடைமொழி தந்து வருணித்தார். இவர் திருநாடு அலங் கரித்தமை குறித்துப் பாடத்திட்டக் குழுவிலும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி இவர் குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டது. இத் த ைக ய பெரும்புலவரின் அணிந்துரை அறிவியல் விருந்து என்ற என் நூலை அணி செய்கின்றது. இந்த நூலை முதறிஞர் உயர் திரு. தி. மு. நாராயண சாமிபிள்ளையவர்கட்கு, பங்கயம் பூத்த நீலமால் வரைபோல் பணிமிசை பொவியரங் கேசன் துங்கமார் பாதம் மறந்திடா உளத்தோன் துளயநல் அறநெறி காத்து