பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*அறிவியல் விருந்து அவதாரம் 28 Ꮏ மங்கலப் புகழைப் பெற்றவன்; வேழ வனத்திருப் பணிபுரி அன்பன்: பங்கமில் நாரா யணப்பெரு நம்பி பதமலர்க் குரியதிந் நூலே. என்ற பாடலின் மூலம் இந்நூலை அன்புப் படையலாக் கி மகிழ்ந்தேன். நூல்முகத்தில் நான் இவரைப் பற்றி எழுதிய குறிப்பு இது : மூதறிஞர் உயர்திரு. தி. மு. நாராயணசாமிப் பிள்ளை அவர்கள் என் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப் பத்தைத் தந்தவர்கள். இவர்கள் வழக்குரைஞராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கிப் பிறகு படிப்படியாகத் தம் வாழ்க்கையைப் பொதுப் பணிக்கென அர்ப்பணித்துக் கொண்டவர்கள். அரசினர் வழக்குரைஞர். திருச்சி தகராட்சித் தலைவர், திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் . சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினர், சென்னை தேர்வு ஆணையின் தலைவர், சென்னை மாநில அறநிலையக் கழகத் தலைவர், பல்கலைக் கழக மானிய ஆணைய உறுப்பினர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் போன்ற பல்வேறு பொறுப்புகளில் உளத் தூய்மையுடன் பணி புரிந்து பெரும்புகழ் பெற்றவர்கள். இப்பொறுப்புகளை வகித்த பொழுது பண்புடைய ார் பட்டுண்டு உலகம்” (குறள்-996), உயர்திணை என் மனார் மக்கட் சுட்டே’ (தொல். சொல். கிளவியாக்கம்-1) என்ற ஆன்றோர் வாக்குகட்கு எடுத்துக் காட்டாக அமைந் தவர்கள். எவர் மாட்டுப் புன் முறுவலுடன் இனிமையாகப் பேசுபவர்கள்; காண்டற்கெளியவர்கள்; கடுஞ் சொல் அறியாதவர்கள். எடுத்த காரியத்தை இனிதே முடிக் கும் திறம் படைத் தவர்கள். நல்ல சமயப் பற்றுடையவர்கள்: என்றும் இறையை உளத்தில் உறுதியாகக் கொண்டிருப் ப்வர்கள். தாட்டு நலன்களிலும் இளைஞர் கல் வியிலும் பேரூக்கம் காட்டுபவர்கள். தற்சமயம் (ஏபிரல் 19 67 )