பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 நினைவுக் குமிழிகள்-4 திருவானைக்கா திருக்கோயில் திருப்பணிக் குழுவின் தலைவராக இருந்து பணியாற்றி வருபவர்கள். பழுத்த சமயப்பற்றும் இறைவன்பால் உறுதியும் உடைய இவரை இறைவனே இக் கைங் கரியத்தில் ஈடுபடுத்தினான் போலும் 1930-இல் என் உயர் நிலைப்பள்ளி வாழ்க்கை. யின் போதிருந்தே என்னை அறிந்தவர்கள்; எனக்குக் கலைத் தந்தையாகவும், கல்வித் தந்தையாகவும், வாழ்க்கை யின் வழிகாட்டியரகவும் இருப்பவர்கள். இத்தகைய மூதறிஞர்பால் யான் கொண்டுள்ள பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்கும் அறிகுறியாக அன்னார் பொன்னார் திருவடி களில் இந்நூலை அன்புப் படையலாக்கிப் பெருமை கொள்ளுகின்றேன். அன்னார் ஆசியால் பல இளம் உள்ளங். களில் இந்நூல் பல நல்லெழுச்சிகளை விளைவிக்கும். என்பது என் திடமான நம்பிக்கை" (20.4.67). 1974-இல் டாக்டர் மு.வ. திருநாடு அலங்கரித்த பிறகு என் வேண்டுகோட் கிணங்கப் பல்கலைக் கழகம் ஓராண்டு இவரைத் தமிழ்ப் பாடத் திட்டக் குழுவின் தலைவராக நியமித்தது. சிறந்த முறையில் கூட்டத்தை, நடத்திக் கூட்டத்தின் தரத்தை உயர்த்தினார். இவரை இருப்பூர்தி நிலையத்தில் வரவேற்று பீமா உணவு விடுதியின் மாடியில் ஒரு நல்ல அறையை அமர்த்தித் தங்க வைத்தேன். சிற்றுந்து (Van) ஒன்று அமர்த்தி ஏழுமலையான் தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்தேன். அவர் ஆசியால் எனக்கும் அத்தரிசனம் கிடைக்கும் பேறு. ஏற்பட்டது. இருப்பூர்தியிலிருந்து இறங்கும்பொழுது: வழியில் பணப்பையைத் தவற விட்டு விட்டார். அறைக்கு. வந்த பிறகுதான் இதுதெரிந்தது. என்ன முயன்றும் அது கிடைத்திலது. ரூ. 300/- வரை இருந்ததாகச் சொன்னார். இது எனக்குப் பெருவருத்தத்தை விளைவித்தது. 'ஏழுமலையானைச் சேவிக்கும் முன்பதாக, அப்பை ஒரு திருடன் கையில் சிக்காது ஏழையொருவனின் கையில்