பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் காசி யாத்திரை 28.3: சிக்கினால் மிகவும் மகிழ்வேன்' என்று சொல்லி மன அமைதி பெற்றதை இன்றும் நான் நினைவு கூர்கின்றேன். குமிழி-194 38. என் காசி யாத்திரை 1968 அக்டோபர் 12 முதல் 14 நாள் முடிய அனைத்திந்திய கீழ்த்திசை மாநாடு (24-வது அமர்வு) வாரணாசியில் நடைபெற்றது. அந்த மாநாட்டிற்குப் பல்கலைக் கழகம் என்னைப் பேராளராக அனுப்பியது. 52 அகவை நிலையில் இருந்த நான் இதனைக் காசியாத்திரை"யாக மேற்கொள்ளவும் நினைத்தேன். வைணவ சமயக் கருத்துப்படி முத்தி தரு நகரங்கள் ஏழு. அவை: அயோத்தி, மதுரை(வடமதுரை), LDFT6){L}; காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை என்பனவாகும்'. சைவ சமய நம்பிக்கைப்படி அவை: தில்லை, திருவாரூர், மயிலாடுதுறை, வடதிருமுல்லைவாயிலும் தென்திரு முல்லை வாயிலும் முதுகுன்றம் (விருத்தாசலம்), கூடல் (மதுரை), நெல்லை, காஞ்சி, திருக்கழுக்கழுக் குன்றம், திருமறைக்காடு (வேதாரண்யம்) என்ற பத்தாகும். தாயுமான அடிகள் தீர்த்தயாத்திரைப் பற்றி, மூர்த்திதலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினற்கோர் வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே” என்று கூறியுள்ளமையை நினைந்து என் துணைவியுடன் காசி யாத்திரையைத் தொடங்கத் திட்டமிட்டேன். 1. தே. பி. 237. ஒப்பிலியப்பன் சந்நிதி சீராம தேசிகனின் உரை காண்க. 2. தா. பா. : பராபரக்கண் ணி-156,