பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

逻84 நினைவுக் குமிழிகள்-4 அவளையும் கட்டணம் செலுத்தி மாநாட்டுப் பேராள ராக்கிக் கொண்டேன். தனிப்பட்ட முறையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வோருக்கு இருப்பூர்திப் பயணத்தில் கிரும்புவதற்குக் கட்டணம் செலுத்துதல் வேண்டா. செயலாளர் கடிதங்கொண்டு இருப்பூர்தித் துறைக்கு எழுதி சலுகை பெறும் கட்டளை பெற்றுப் பயணச் சீட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். என் மனைவிக்கு அவ்வாறு பயணச் சீட்டு வாங்கிக் கொண்டேன். நான் போகவும் திரும்பவும் பயணச் சீட்டுகள் வாங்கிக் கொள்ள வேண்டும் பல்கலைக்கழகம் எனக்குப் பயணப்படி தருவதால். துறையென்று ஒன்று இல்லாமல் தனி விரிவுரையாள ராக இருப்பது பல்கலைக்கழக வட்டத்தில் அந்தஸ்து’’ என்ற ஒன்று இல்லாத நிலை, இந்நிலைமையில் பணியாற்றுபவர்களைப் பிற துறையினர், குறிப்பாகப் பேராசிரியர்-துறைத்தலைவர்கள், முதல்வர் முதலியோர் மதிப்பதில்லை. பல்கலைக் கழக அலுவலகத்திலும் அவ்வளவாக மதிப்பு இருப்பதில்லை. வாரணாசியில் நடை பெற்ற கீழ்த்திசை மாநாட்டிற்கு என்னைப் பேராளராக அனுப்புமாறு பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பம். அனுப்பினேன். அதற்குச் சாதகமான முடிவு ஏற்பட வில்லை. நானே என் செலவில் போய்வரலாம் என்றும், ஆனால் போய்ச் சேரும் நாட்கள், மாநாடு நடைபெறும் நாட்கள், திரும்பும் நாட்கள் இவை நான் பணி செய்த நாட்களாகக் கருதப்படும் என்ற கடிதம் வந்தது. இதை ஆய்ந்து பார்த்ததில் முதல்வர் அலுவலகம் முதல் பதிவாளர் அலுவலகம் வரை எனக்கும் என் விண்ணப்பத் திற்கும் மதிப்பு தருவதில்லை என்பதை அறிந்தேன். இப்போது துணைவேந்தராக இருந்தவர் டாக்டர் வி.சி. வாமன்ராவ். இது குறித்து அவரை நேரில் சந்தித்துப் பேசினேன். பல பேராசிரியர்கள் இத்தகைய