பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் காசி யாத்திரை 段き5 மாநாடுகளில் ஆராய்ச்சிக் கட்டுரை கூடக் கொடுக்காமல் அதை ஒரு மகிழ்ச்சிச் செலவாகக் கருதிப் போய் வருவதை யும் நான் காணாமல் இல்லை எனபதையும் அவரிடம் குறிப்பிட்டேன். ஒரு சில நாட்களில் முன் அனுப்பிய கட்டளையைச் சிறிது மாற்றி என்னைப் பல்கலைக் கழகச் செலவில் அனுப்புவதாகப் புதிய கட்டளை பிறப்பிக்கப் பெற்றது. கல்வி நிகழ்ச்சிகளில் நான் கொண் டிருந்த உண்மையான அக்கறையை நன்கு புரிந்துகொண்டு இதனைச் செய்த துணைவேந்தரைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. மேற்குறிப்பிட்ட வைணவ சமயம் குறிப்பிடும் நகரங் களில் மாயை, அவந்தி, துவாரகை இங்குப் போக வாய்ப்பு ஏற்படவில்லை. சைவர்கள் கூறும்கருத்துப்படி திருமுல்லை வாயில்கள், முதுகுன்றம், திருமறைக்காடு இந்த மூன்று இடங்களுக்குப் போய்வரவும் வாய்ப்பில்லை. இறைவன் அருளால் இப்பிறவியில் இந்த நகர்களைச் சேவிக்கும் பேறு கிட்டும் எனக் கருதுகின்றேன். அந்தக் காலத்தில் காசிக்குப் போவதற்குச் சென்னையி லிருந்து நேர் இருப்பூர்தி வண்டி இல்லை. இட்டார்சி என்ற இடத்தில் மாறிப் போக வேண்டும். சென்னையி லிருந்து நான் சென்ற வண்டியிலேயே டாக்டர் M. A. துரையரங்கனார். டாக்டர் மு. வரதராசனார் ஆகிய பேராசிரியர்களும் பயணம் செய்தனர்.வண்டியில் உறங்கும் நேரம் போகப் பகலில் இலக்கியக் கருத்துகள், நாட்டு நடப்புகள் முதலியவைபற்றி வேடிக்கையாகப் பேசிக் கொண்டே சென்றோம். நானும் மனைவியும் அலகபாத் தில் இறங்கி தங்கும் விடுதியில் அறையொன்றை எடுத்துக் கொண்டு தங்கினோம். அன்று மாலை ஊரைச் சுற்றிப் பார்த்தோம். கையில் திடீர் காபி’ப் பொடியையும் சருக்கரையையும் வைத்திருந்தோம். வடநாட்டுப் பகுதி களில் பால் நன்றாக இருக்கும் என்பதை நான் அறிவேன்.