பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 நினைவுக் குமிழிகள்-4 என்னுடைய ஜப்பல்பூர் பயணமும் (அக்டோபர் 1958), தில்லிப் பயணமும் (சனவரி, 1964) எனக்கு இந்த அதுபவத்தைத் தந்தன. அங்காடித் தெருவில் பால் வாங்கிக் காபி அருந்திய பின்னர் ஊரை சுற்றிப் பார்த்தோம். எல்லா இடங்கட்கும் போக முடியவில்லை; மாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் (5-7 மணி) தெரியாத இடங்களுக்குப் போக விரும்பவில்லை. முதலில் பண்டித சவகர்லால் நேரு வாழ்ந்த 'ஆனந்தபவனைப்" பார்த்தோம். அவர் பயன்படுத்திய நூலகம், மேசை, நாற்காலி, சாய்வு நாற்காலி, எழுது கோல்கள். பேனாக்கள் முதலியவை நல்ல முறையில் வைக்கப் பெற்றிருந்தன. சமையல் அறை, உணவு கொள்ளும் அறை, பார்வையாளர்களை வரவேற்று உரையாடும் அறை, பள்ளியறை முதலியவற்றையெல்லாம் பார்த்து மகிழ்ந்தோம். பெரும்பாலான சுவர்களின் உட்புறம் வழு வழுப்பான தேக்குப் பலகையால் மூடப் பெற்று எழிலுடன் காட்சியளித்தது. ஒ அலுவலர் எங்களுடன் சுற்றி வந்து ஒவ்வோர் இடத்தையும் காட்டி விளக்கினார். வீட்டின் பின்புறத் தோட்டத்தில் ஒரு பக்கம் அணையாத நேரு சோதியை’க் காட்டினார்.நாங்கள் ஆனந்த பவனத்திற்குப் போனபோது அதிகக் கூட்டம் இல்லை; ஓரிருவரே வந்து போய்க் கொண்டிருந்தனர். சுமார் 7 மணிக்கு ஒரு சிற்றுண்டிக் கடையில் பூரி சாப்பிட்டு விட்டு அறைக்குத் திரும்பினோம். மறுநாள் அதிகாலையில் அறையிலேயே காலைக் கடன்களை முடித்துக் கொண்டு ஒரு டோங்காவில்" (ஒருவகைக் குதிரை வண்டி) திரிவேணி சங்கமத்திற்குச் சென்றோம். மக்கள் ஒரு பக்கமாக விசைப்படகை நோக்கிப் போய்க் கொண்டிருந்தனர். ஒரு சாதாரணப் படகோட்டி-தெலுங்கு பேசுபவன்-வேறொரு பக்க மாக இட்டுச் சென்று வாடகை பேசாமல் தனிப்படகில் திரிவேணிக்கு இட்டுச் சென்றான். ஒரு பக்கமாகக் கங்கை