பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ன்ன் காசி யாத்திரை 287 யின் வெள்ளம் வேகமாக வந்து கொண்டிருந்தது; இதை அமைதியாக வந்து கொண்டிருந்த யமுனை வெள்ளம் சந்தித்தது. இரண்டு நதிகளும் சந்திக்கும் இடத்தில் பூமி யின் அடியில் சரசுவதி நதி சந்திப்பதாகக் கருதுவது ஒர் ஐதிகம். இந்த இடமே திரிவேணி (மூன்று நதிகள் சந்திக்கும் இடம்) என்ற பெயர் வழங்கிவருகின்றது. படகு கள் யாவும் அமைதியானயமுனையில்தான் செயற்பட்டன. இவற்றில் பயணம் செய்யும் மக்களை மூன்று நதிகளும் சந்தித்து'ஒரு பக்கமாக நீரோட்டம் அதிக வேகமில்லாத இடத்தில் படகுகளுடன் நிறுத்துவார்கள். அங்குப் படகு களில் புரோகிதர்கள் இவர்கட்கு அதுட்டானம் செய்து வைப்பார்கள். நாங்கள் ஓரிடத்தில் அதுட்டானத்தை முடித்துக் கொண்டு படகிலேயே திரும்பினோம். கரையை அடைந்ததும் படகுக் கட்டணம் ரூ 25/என்றான்; எங்கட்குத் திகீர்’ என்றது. அவன் எங்களை ஒரு பக்கமாக இட்டுச்சென்று ஏமாற்றி விட்டதை அப்போதுதான் அறிந்தோம். விசைப்படகில் சென்றிருந் தால் கட்டணம் ஒரு ரூபாய் என்பதைப் பின்னர் அறிந்து அவன்மீது சினந்தேன். 'கோபித்துக் கொண்டால் கட்டணம் வேண்டாம் என்று பிணங்கிக் கொண்டான், கட்டணத்தை அவனிடம் தந்து விட்டேன். செலவு செய்யத்தானே வந்தோம் என்று மன அமைதி கொண்டேன். வந்த டோங்காவிலேயே திரும்பினோம். டோங்கா வண்டிக்காரன்தான் புதியவர்களான எங்களைப் படகோட்டியிடம் சிக்க வைத்தான் என்பதைப் பின்னர்தான் அறிந்தேன். வடநாட்டில் பண்டாக்கள் கொள்ளையடிப்பார்கள்: அவர்களிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள்' என்று திருப்பதியில் இந்தித் துறை நண்பர்கள் எச்சரித்தும் படகோட்டியிடம் ஏமாந்து போனதை எண்ணி வருந்தினேன். பிரயாகையில் "நாட்டுக் கோட்டை நகரசத்திரத்தில்' (149, Mori, 3Daragani P.O., U.P. India)தங்கியிருந்திருந்தால் இத்தகைய சங்கடங்கள் நேர்ந்திரா. உணவுக்கும் சிரமப்பட்டிருக்த