பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2書& நினைவுக் குமிழிகள்-; வேண்டிதில்லை; ஆனால் அலகாபாத்திலுள்ள சில இடங் களைப் பார்த்திருக்க முடியாது. இவற்றையும் பார்க்க வேண்டும் என்று நின்ைத்திருந்தால், இன்னொரு நாள் அலகாபாத்தில் தங்க நேரிட்டிருக்கும். ஆனால் இச் சத்திரம் 6, 7 கி.மீ தொலைவில் உள்ளது என்பதை யறிந்துதான் வாடகை விடுதியில் தங்கினோம். வாழ்க்கை யில் துன்பங்களும் கலந்து வருவதால்தானே இன்பம்’ இனிக்கின்றது? நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்? தங்கியிருந்த அறைக்கு உரிமையாளர் தென்னிந்திய உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். மனநிறைவு இல்லாது. உண்டோம்; சமைக்கும் பக்குவம் அவர்கட்குத் தெரிய வில்லை. வடநாட்டு பூரி, சப்பாத்தி முதலியவற்றையே உண்டிருக்கலாம் என்று பின்னர் நினைத்துக்கொண்டோம். எனக்கு எல்லா வகை உணவு முறைகளிலும் பழக்கம் உண்டு; என் மனைவிக்காக தென்னிந்திய உணவுக்கு ஏற்பாடு செய்தது தவறு என்பதை இருவருமே. உணர்ந்தோம். அறையைக் காலி செய்து- கொண்டு இருப்பூர்தி நிலையத்திற்கு வந்து வாரணாசி செல்லும் வண்டியில் ஏறினோம். டாக்டர் துரையரங்கனாரையும் டாக்டர் வரதராசனாரையும் இட்டார்சியில் சந்திக்க வில்லை. நாங்கள் அலகாபாத்தில் இறங்கி அடுத்த நான் இரயிலில் ஏறினோம். அந்த வண்டி சுமார் மாலை 4. மணிக்கு வாரணாசியை அடைந்தது என்பது நினைவு. இந்த வண்டியில் அந்தப் பேராசிரியர்கள் இருவரையும் இறங்கும்போது சந்தித்தேன். அவர்களும் வழியில் எங்கோ இறங்கி அடுத்த நாள் இதே வண்டியில் வந்திருக்க வேண்டும். கூலியாளிடம் மூட்டைகளைத் தந்துவிட்டு மிகப் பாதுகாப்புடன் அவனைக் கவனித்துக் கொண்டே வந்து கொண்டிருந்தேன். இருப்பூர்தி நிலையத்திலிருந்து படிகள் மீது ஏறி மேம்பாலம் வழியாகச் சென்று அடுத்த பக்கத்