பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் காசி யாத்திரை 289 தில் இறங்க வேண்டும். இறங்குவதற்கு இரண்டு புறமாக வழிகள் இருந்தன. கூலியாளைப் பார்த்துக் கொண்டே வந்ததால் நான் சரியான வழியில் இறங்கி வந்து விட்டேன். கூட்டம் அதிகமிருந்ததால் என்னைப் பார்த்துக் கொண்டே வந்த எனது மனைவி கூட்டத்தில் என்னைப் பார்க்க முடியாமல் அடுத்தப் பக்கம் இறங்கி விட்டாள். நான் இறங்கின. பக்கம் டாக்டர் வரதராசனாரும் டாக்டர் M.A. துரை அரங்கனாரும் நான் இறங்கும்போது படுக்கை பெட்டிகளுடன் காத்திருந்ததைக் கண்டேன். கூலியாளுக்குக் கூலியைக் கொடுத்து விட்டு சாமான்களைப் பார்த்துக் கொள்ளுமாறு இரு பேராசிரியர்களிடமும் சொல்லிவிட்டு என் மனைவியைத் தேடிக்கொண்டு மீண்டும் படிகளின் மீது ஏறிச் சென்று அடுத்தப் பக்கமாக (நாங்கள் இறங்கவேண்டியதற்கு அடுத்த பக்கம்) இறங்கிப் பார்க்கும்போது அங்கு என்னை எதிர் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் என் மனைவி. அவளைக் கூட்டிக் கொண்டு சாமான்கள் இருந்த இடத்திற்கு வந்தேன். பேராசிரியர் துரையரங்கனார், * * ଶt t ଈ୪t மிஸ்டர் ரெட்டியார்,அக்கினி சாட்சியாகக் கைபிடித்த பெண்ணைக் கைவிட்டு விட்டீர்களே!' என்று வேடிக்கையாகக் கேட்டார். 'பேராசிரியர் அவர்களே, நான் கைவிட வில்லை, நாங்கள் வானப்பிரஸ்த நிலையிலிருக்கின்றோம். இந்நிலையில் அவள்தான் வழி தெரியாமல் என்னை விட்டு நழுவி விட்டாள்' என்றேன். என் மனைவியும் பேராசிரியரின் நகைச்சுவைப் பேச்சையொட்டி, ஆமாங்க, இவர் எப்பொழுதும் இப்படிதான். வீட்டிலும் இப்படித்தான்: மனைவி என்று ஒருத்தி இருக்கின்றாளே, என்ற நினைப்பே இருப்பதில்லை. புத்தகங்களைக் கட்டிக் கொண்டு கிடப்பார்' என்றாள். நானும் நகைத்து விட்டு மெளனியானேன். இரண்டு பேராசிரியர்களும் மாநாட்டாளர்கள் தங்குவதற்கு வசதி செய்து கொண்டிருந்த இடத்திற்குப் தி-19