பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 நினைவுக் குமிழிகள். போய் விட்டனர். நான் ஆள் இழுவண்டியை அமர்த்திக் கொண்டு காட்ஹெளலியா என்ற பகுதியிலுள்ள பூர்-காசி நாட்டுக் கோட்டை நகரச் சத்திரத்தில் வந்து இறங்கினேன். இங்கு நான் தங்குவதற்குத் தமிழ் கடல் ராய. சொக்கலிங்கன் அவர்கள் இச்சத்திரத்துக்குப் பொறுப்பாளராக இருந்த திரு. வீர. பழ வினைதீர்த்தான் செட்டியாருக்குக் கடிதம் எழுதி எனக்கும் தெரிவித்திருந் தார்கள். இந்த இடத்தைத் தவிர காசியில் குமாரசாமி மடத்தில் தங்குவதற்குத் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியின் முதல்வர் திரு. கே.எம். வேங்கட்டராமய்யாவும் மேற்படி மடத்துப் பொறுப்பாளர் ஜி. கல்யாணசுந்தரம் பிள்ளை அவர்கட்கு எழுதியிருந்தார்கள். அங்குத் தங்கி யிருந்தால் உணவும் இலவசமாகக் கிடைத்திருக்கும் (இதை நான் விரும்பவில்லை). மேலும் காசி இந்துக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக இருந்த திரு.T.B. சித்தலிங்கய்யா வுக்கும் எழுதியிருந்தேன். அவர் நடுவண் அரசுத் திட்டமொன்றுக்கு உதவும் பொருட்டுத் தில்லியில் தங்கி யிருந்தார். அவரும் காசி மடத்தில் தங்குவதற்கு ஏற்பாடும் செய்துவிட்டு நகரத்தார் சத்திரத்தில் தங்குவது எல்லா வற்றிற்கும் வசதியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந் தார். இக்காரணத்தால் நான் நாட்டுக் கோட்டை நகரத் தார் சத்திரத்திலேயே தங்குவதாக முடிவு செய்தேன். திருத்தலப் பயணக் காலங்களில் நகரத்தார் தம் சமூகத்தினர் வசதிகளுடன் தங்குவற்கென்று திருத்தலங் களில் சத்திரங்களை அமைத்துள்ளனர். இராமேசுவரம் சிதம்பரம், மதுரை முதலான இடங்களில் இத்தகைய சத்திரங்களைக் காணலாம். இங்ங்னம் தென்னாட்டிலே யன்றி வடநாட்டிலும் இத்தகைய சத்திரங்களை நிறுவி யுள்ளனர். காசி (உ. பி.) பிரயாகை, (உ. பி.) அயோத்தி (உ. பி.), கயை (பீஹார்) கல்கத்தா, காளிகாட் (கல்கத்தா), தாரகேஸ்வரம் (கல்கத்தா அருகிலுள்ளது), கோதாவரி (ஆந்திரம்). நாசிக் பஞ்சவடி (மகாராஷ்டிரம்)