பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 நினைவுக் குமிழிகள்-4 மாநாடு மூன்று நாட்கள் வாரணாசி வடமொழிப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. நானும் மனைவியும் இந்த மூன்று நாட்களும் குளித்து முடிந்ததும் ஆள்மிதி வண்டியில் மாநாடு நடைபெறும் இடத்திற்குச் சென்று. வருவோம், மூன்று நாட்களிலும் காலை, நண்பகல், மாலை, இரவுகளில் மாநாட்டு உணவு வசதிகளைப் பெற்றோம். இதற்கு மூன்று நாட்களுக்கும் ஒவ்வொரு வரிடமும் ரூ 20|-வாங்கிக் கொண்டார்கள். தென்னாட்டு. வடநாட்டுக் கலப்புணவு இங்குக் கிடைத்தது. இரவு: ஒன்பது-ஒன்பதரைக்கு ஆள்மிதிவண்டியில் சத்திரத்திற்கு, வந்து சேர்ந்து விடுவோம், ஒரு நாள் குறைந்த கட்டணம் வாங்கிக் கொண்டு மாநாட்டுப் பேராளர்களைக் காசிக்கு அருகிலுள்ள முக்கியமான இடங்கட்கு இட்டுச் சென்றனர். இந்த மூன்று நாட்களிலும் கங்கை சென்று நீராட நேரம் இல்லாததால் சத்திரத்திலேயே நீராடிக் கொண்ட்ோம், சத்திரத்திலே வழிபாட்டிற்குச் சிவாலயம் ஒன்று உண்டு. என் மனைவிக்கு நச்சுக் காய்ச்சல் வந்து விட்டதால் 25 நாட்கள் வரையில் சத்திரத்தில் தங்க நேரிட்டுவிட்டது. கீழ்த்திசை மாநாட்டில் அந்த ஆண்டுக்கு தெ.பொ.மீ. திராவிட ஆராய்ச்சிப் பகுதிக்குத்தேர்ந்தெடுக்கப் பெற்றி ருந்தார். அந்த இடத்தை டாக்டர் துரை அரங்கசாமி நிறைவு செய்தார். நான் ஆழ்வார்களின் இயற்கை பற்றிய såso sessir' (Nature Poetry of the Azhvars) argård. ஆங்கில கட்டுரையை இப்பகுதியில் படித்தேன். இத்தகைய மாநாடுகட்குப்போகும்போது கட்டுரையின்றிப் போவ தில்லை. ஒய்வு பெற்ற பிறகு இக்கட்டுரைகளைத் தொகுத்து (Collected Papers)என்ற தலைப்பில் நூலொன்று. வெளியிட வேண்டும் என்ற திட்டம் மாநாடுகளில் கலந்து கொள்ள வாய்த்த முதல் கூட்டத்திலேயே சங்கல்பித்துக் "கொண்டிருந்தேன். இதனால் கட்டுரைகள் நன்கு அமைய வேண்டும் என்ற கவலையால் ஒரு கட்டுரை எழுதவே 15, நாட்கள் முதல் 30 நாட்கள் வரை செலவிடுவேன். சில: