பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் காசி யாத்திரை 多姆多 கட்டுரைகள் முடிக்க இரண்டு திங்கள் வரை எடுத்துக் :கொண்டதும் உண்டு. குமிழி -195 39. நகரத்தாரின் நாகரிகமும் பண்பாடும் såssair காரைக்குடியில் அழகப்பா ஆசிரியர் கல்லூரி யில் பத்து ஆண்டுகள் (1950-60) பணியாற்றியபோது செட்டி நாட்டில் பல பெரிய புள்ளிகளுடன் கலந்து பழகும் வாய்ப்பு தமிழ்க்கடல், சிவமணி, சிவம் பெருக்கும் சீலர் திரு. ராய. சொக்கலிங்கம் அவர்கள் மூலம் ஏற்பட்டது. நகரத்தார் சமூகத்தைப் பற்றியும் அவர்கள் ஆற்றிய ஆற்றிவரும் பல்வேறு திருப்பணிகள் பற்றியும் ஓரளவு தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்பட்டது. தென்னிந்தி யாவில், குறிப்பாக இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இவர்களைப்போன்று கட்டுப்பாடு, ஒழுங்கு முறை, பொது நலத்தொண்டு போன்றவற்றில் பெரும் புகழ்பெற்றுத் திகழும் பிறிதொரு சமூகம் இருப்ப தாகத் தெரியவில்லை. இவர்களின் மூதாதையர் கோவலன் மரபைச் சேர்ந்தவர்களாகவும். காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து குடியேறினவர்களாகவும் சொல்லிக் கொள்ளுகின்றனர். தண்ணீர் நிறைந்த பகுதியில் வாழ்ந்த இவர்கள், கடல் கொந்தளிப்பினால் தாம் வாழ்ந்த இடம் மூழ்கிவிட்டதனால், தண்ணீரே அருகியிருக்கும் வறட்சி யான பகுதிக்குக் குடியேறிவிட்டனர் என்று நகைச் சுவை யாகச் சொல்லுவார் கம்பன் அடிப்பொடி. நகரத்திலிருந்து (பட்டினம்) நாட்டுப்புறத்திற்கு வந்தவர்களாதலால் "நகரத்தார்' என்று வழங்கப் பெறுகின்றனர் போலும்!