பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芝9强 நினைவுக் குமிழிகள்-4 நாட்டுப் புறத்திற்கு வந்த பிறகு வீடுகளைக் கோட்டை போல் (பாதுகாப்பாக அமைத்துக் கொண்டதால்)'நாட்டுக் கோட்டைச் செட்டியார் என்றும் வழங்கப் பெறுகின்றனர். போலும்!! தமிழ்நாட்டை ஆண்ட சேர சோழ பாண்டியர்களை அடுத்துத் தென் நாட்டில் ஆலயத் திருப் பணிகளைப் பக்தியுடன் செய்தவர்கள், செய்து கொண்டிருப்பவர்கள் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தமிழ் கூறு நல்லுலகம் நன்கு அறியும். காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த காலத்தில் திரை கடலோடியும் திரவியம் தேடு' என்ற முதுமொழிக்கிணங்க கப்பலில் பிற நாடுகள் சென்று வாணிகம் புரிந்து பெரிய செல்வர்களானதால்- தன வணிகர்’ என்ற சொற்றொடரால் இதனை யறியலாம்அந்தப் பழக்கத்தால் இலங்கை, மலேசியா, பர்மா, ரெங்கோன், சிங்கப்பூர், ஈப்போ போன்ற வெளி நாடுகளில் தொழில் நடத்தி வருவதை இன்றும் காணலாம். எந்தத் தொழிலைத் தொடங்கினாலும் ஆண்டவனையும் ஒரு பங்காளியாக வைத்துத்தான் தொழில் செய்வதை வழக்கமாகக் கொண்டவர்கள். ஐந்து காசு, பத்துக் காசு என்று அவன் பேரில் வைக்கும் பங்கு பல ஆண்டுகளில் பல இலட்சங்களாக வளர்ந்துவிடும். இந்தப் பணத்தைக் கொண்டும் தங்கள் வருவாயிலும் ஒரு பகுதியைக் கொண்டும்தான் ஆலயத் திருப்பணிகளைப் புரிந்து வருகின்றனர். தென்னாட்டில் பெரும்பாலான சிவால யங்கள் புதுப்பிக்கப் பெற்றதில் இவர்கள் பங்கு இல்லா திராது. தற்காலத்தில் இவர்கள் பங்கு கல்விப் பணியிலும் சென்றுள்ளது. தொடக்கக் காலத்தில் செட்டி நாட்டுப் பகுதிகளிலும்பிற இடங்களிலும்தேவாரப் பாட சாலைகள், வேத பாட சாலைகளைத் தோற்றுவித்தனர். பின்னர் தற்காலக் கல்வி நிலையையொட்டி பல தொடக்கநிலைப்