பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரத்தாரின் நாகரிகமும் பண்பாடும் 295 பள்ளிகள் தோன்றச் செய்தனர். செட்டி நாட்டுப் பகுதிகளில் பல ஊர்களில் இத் தொடக்கநிலைப் பள்ளிகள் பல சிறந்த உயர்நிலைப் பள்ளிகளைப்போல் சிறந்து விளங்குவதை இன்றுங் காணலாம். காலத்தையொட்டி பாலர் பள்ளிகள், உயர்நிலைத் தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், இளையோர் தொழிற்பள்ளிகள், பல்தொழில் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, ஆசிரியர் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனங்கள். உடற்பயிற்சிக் கல்லூரிகள், இசைக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் என்ற எல்லா நிலைகளிலும் இவர்கள் கல்விக்காகச் செய்த, செய்துவரும் தொண்டினைக் காணலாம்.' 1930க்கு முன்னரே ரெங்கூன் பல்கலைக் கழகத்திற்கு பெருந் தொகைகள் வழங்கி அறக்கட்டளைகளை ஏற்படுத்தி யுள்ளமை குறிப்பிடத்தக்கது. செட்டி நாட்டரசர் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரால் தோற்றுவிக்கப்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகம், காரைக்குடியில் வள்ளல் டாக்டர் அழகப்பச் செட்டியாரால் சுமார் 1000 ஏக்கர் நிலத்தி லுள்ள கல்லூரி வளாகத்திலுள்ள பாலர் பள்ளி முதல் கலைக் கல்லூரி, பல்தொழில் கல்லூரி, பொறியியற் கல்லூரி வரையிலுள்ள நிறுவனங்கள். மதுரையில் கருமுத்து. தியாகராச செட்டியார் ஏற்படுத்திய பல்வேறு கல்வி நிலையங்கள் இத்தகைய கல்வி பணிக்கு சிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன. மகளிர்க்கென கல்வி நிலையங்களைத் தோற்றுவித்த பெருமையும் இச் சமூகத்தினருக்கு உண்டு. தாம் தொடங்கின கல்வி நிலையங்களே யன்றி பிறரால் தொடங்கப் பெற்ற திருச்சி 1. நகரத்தார் மாணவர் சங்கம்-சிறப்பு மலரில் (1964) - (கல்வி மலரில்)-பல விவரங்களைக் காணலாம்.