பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

295 - நினைவுக் குமிழிகள்-4 தேசியக் கல்லூரி, புதுக்கோட்டை அரசர் கல்லூரி, சென்னை விவேகாநந்தர் கல்லூரி, மதுரைக் கல்லூரி, மதுரை டோக் பெருமாட்டி மகளிர் கல்லூரி, சென்னை மேரி அரசி கல்லூரி சென்னை (கிண்டி} மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம், காரைக்குடி மத்திய மின்சார வேதியியல் ஆராய்ச்சி நிலையம், இராமாதுச. கணித ஆராய்ச்சி நிறுவனம், சென்னைப் பல்கலைக் கழகம், மதுரை-காமராசர் பல்கலைக் கழகம், சாந்தி நிகேதனம் விசுவபாரதி பல்கலைக் கழகம், கேரளப் பல்கலைக் கழகம், காசி இந்துப் பல்கலைக் கழகம், இரங்கூன் பல்கலைக் கழகம், மலேயாப் பல்கலைக் கழகம் போன்ற உள்நாட்டு-வெளிநாட்டுக் கல்வி நிலையங் கட்கும் பெருந்தொகைகள் வழங்கியுள்ளனர் இச் சமூகத்தினர். பண்டிருந்து இன்றுவரை இச் சமூகத்தினர் வட்டித் தொழிலைத் தம் குலத் தொழிலாகக் கொண்டிருந்தாலும், இன்று இவர்கள் பஞ்சு ஆலைகள், நூற்பு ஆலைகள், துணி உற்பத்தி ஆலைகள் போன்ற பல்வேறு ஆலைத் தொழில் களில் ஈடுபட்டுள்ளனர். உள் நாட்டிலேயே இத்தொழில் களைச் செய்தும் வருகின்றனர். தேயிலை, காஃபி இவற்றை உற்பத்தி செய்தும் வருகின்றனர். இக்கால நகரத்தார்கள் வட்டித் தொழிலையும் வைத்துக்கொண்டு வேறு நவீனத் தொழில்களிலும் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து 'செட்டி நாட்டுப்' பகுதிகட்குக் குடியேறிய குடும்பங்கள் நாம் அதிசயக்கத் தக்க முறையில் அமைந்துள்ளன. இக்குடும்பங்கள் ஒன்பது கோயில்கட்குள் அடங்கும்படி அமைந்துள்ளன. அதிக எண்ணிக்கைகளில் அடங்கும் கோயில்களில் பல உட் பிரிவுகள் அமைந்துள்ளன. இந்த ஒன்பது கோயில்கள் வருமாறு : 1. இளையாற்றங் குடிக்கோயில் . இதில்