பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 . நினைவுக் குமிழிகள் 4 குடைய மாப்பிள்ளைக்கு மற்றொரு கோயிலுக்குரிய மணப் பெண்ணைத் திருமணம் புரிந்துகொள்ள வேண்டும். எ-டு. இளையாற்றங்குடிக் கோயிலுக்குரியார் மாற்றுார்க் கோயிலுக்குரியார் வீட்டில் பெண எடுத்துக் கொள்ள வேண்டும். திருமணத்தன்று இரண்டு கோயில்களிலிருந்து மாலைகள் வந்த பிறகுதான் திருப்பூட்டு நடைபெறும். திருமணத்தில் இசை குடிமானம் எழுதுதல் என்ற வரன்முறை வழக்கத்தில் உள்ளது. இதில் இரண்டு கோயில்கட்குரிய மணமகன், மணமகள் பெயர்கள் அவரவர் தந்தையாரின் பெயர்கள், சீதனங்கள் தரும் விவரம் எழுதப் பெற்று மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் இந்த இசைக்குடி மானத்தில் கையெழுத்திடு வார்கள், இந்த இசைக்குடிமான விவரம் இரண்டு கோயில் கட்குரிய பதிவேடுகளிலும் இடம் பெற்றிருக்கும். ஆவணக் களரிகளில் பதிவு செய்து கொள்ளும் முறை போன்ற இதனை நகரத்தார்கள் வழிவழியாகக் கடைப்பிடித்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த நான் இந்த வழக்கத்தை முதன்முதலாக அறிந்தபோது மிகவும் வியப்பெய்தினேன். இவர்கள் நாகரிக முறை என் உள்ளத்தை மிகவும் கவர்ந்தது. திருமணத்தின்போது மணமகனுக்குத் தலைப்பாகை முதலியன அணிவித்து குதிரை ஏற்றம் போன்ற சடங்குகள் நடைபெற்று வருகின்றன. இதுவாணிகத்தின்பொருட்டு மேற்கொள்ளும் பயணத்தினைக் குறிக்கும் ஐதிகம். உயர்கல்வி கற்று பல பட்டங்களைப் பெற்ற தனவணிக இளைஞர்களும்கூட தம் மரபு முறையைப் பின்பற்றுவதற்கு வணிக வேடம் தரித்தல், குதிரை ஏற்றத்திற்கு இணங்குதல் போன்ற சடங்குகட்கு உட்படும் முறை என்னை மேலும் வியக்க வைக்கின்றது. பெரும்பாலும் இவர்கள் திருமணத்தைத்தம் சொந்த ஊரில்தான் நடத்துகின்றனர். இடம் போதாமல் சிறிய வீட்டில் வாழ்கின்றவர்கள்கூட அக்கம்பக்கத்திலுள்ள பெரிய வீட்டை வாடகைக்கு வாங்கித் திருமணம் நடத்துவர்.