பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசியில் சில நிகழ்ச்சிகள் 299; நகரத்தார் தெய்வ பக்தி மிக்கவர்கள். பெரும்பாலும் இவர்கள் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள்; நெற்றியில் திருநீறு. சந்தனப்பொட்டு அல்லது குங்குமப் பொட்டு திகழும். ஒரு சிலர் வைணவ சமயத்தைச் சார்ந்தவர்களாகவும் உள்ளனர். இவர்கள் திருமண் தரித்துக் கொண்டதை ஒரு நாளும் தான் கண்ட தில்லை. இவர்களும் திருநீறு முதலியவற்றையே அணிந்து கொள்ளுகின்றனர். வைணவத் திருக்கோயில்களின் திருப் பணிகளை பெரும் அளவுக்கு மேற்கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அரியக் குடித் (காரைக்குடிக்கு அருகி லுள்ள ஊர்) திருக்கோயிலில் நகரத்தார் மேற்கொண்ட திருப்பணியைக் காண முடிகின்றது. வேறு திருக்கோயில் களிலும் இத்தகைய பணியை மேற்கொண்டிருத்தலும் கூடும். சைவம் வைணவம் என்ற வேறுபாட்டில் கவனம் செலுத்தாது சமரச மனப்பான்மையுடையவர்கள் . காரைக்குடியிலுள்ள பெருமாள் கோயிலில் கருடசேவை, வைகுண்டவாசல் திறப்பு போன்ற நிகழ்ச்சிகளை நகரத் தாரே நடத்தி வருவது இதற்குச் சான்றாகும். குமிழி-! 96 40. காசியில் சில நிகழ்ச்சிகள் கிாசியிலுள்ள நகரத்தார் சத்திரம் ஒரு பெரிய கோட்டையைப் போன்றது. நாட்டில் கோட்டை' போன்ற இல்லங்களை அமைத்த நாகரிகம் நகரத்திலும் "இத்தகைய கோட்டை ஒன்று வேண்டும்; இது சமூகத்தின் மரபையும் காட்டுவதாக இருத்தல் வேண்டும்’ என்ற நோக்கத்தைக் காட்டுவதற்கு இத்தகைய பெரிய கட்டடத்தை அமைத்துக் கொண்டனர் போலும். தவிர "திக்குத் தெரியாத இடத்தில் இது ஒரு சிறந்த பாதுகாப் பாகவும் அமைகின்றது. நான் காசியில் தங்கியிருந்தபோது