பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 நினைவுக் குமிழிகள்.4 தடைபெற்ற சில நிகழ்ச்சிகள் இக்குமிழியில் வெளிப்படு கின்றன. (1) நான் தங்கியிருந்தபோது சிவபூசகர் இராமநாத அடிகள் என்ற பெயர் கொண்ட நகரத்தார் ஒருவரும் சத்திரத்தில் தங்கியிருந்தார்: சத்துவ குணமே தலையெடுக்கும் குணசீலர் அவர். அவரோடு சதா உரையாடி மகிழும் பேறு கிடைத்தது பற்றி பெரு மகிழ்ச்சி யடைவேன். நாங்கள் இருவரும் என் மனைவியும் அதிகாலை யில் 5;-6மணிக்குக் கங்கைக்கு நீராடச் செல்வோம். மக்கள் நீராடுவதற்கு அருமையான, பாதுகாப்பான படிக்கட்டுகள் அமைக்கப்பெற்றுள்ளன. ஒரிடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு நாடோறும் நீராடி வருவோம். பெண்கள் ஆடை மாற்றிக் கொள்வதற்கு படிக்கட்டையொட்டி பல மறை விடங்களும் ஏற்படுத்தப் பெற்றுள்ளன. நீராடிப் பிறகு திருநீறு அணிந்து கொண்டு கமண்டலம் போன்ற வெண்கலப்பாத்திரமொன்றில் கங்கை நீர் எடுத்துக் கொள்வோம். வழியில் 5 காசுக்கு வில்வம் வாங்கிக் கொள்வோம். நேராக விசுவநாதர் ஆலயத்துக்குச் சென்று இலிங்கத்தின்மேல் வில்வத்தைப்போட்டு கங்கை நீர் சொரிந்து வழிபடுவோம். இந்த வசதி விசுவநாதர் ஆலயத்தில் நாடோறும் நடைபெற்று வந்தது. என் துணைவியார் நச்சுக்காய்ச்சலால் தாக்குட்ட நாட்களில் மட்டும் நானும் அடிகளுமே சென்று வருவோம். சத்திரத் திற்குத் திரும்பியதும் இராமநாத அடிகள் சிவபூசையில் இறங்கி விடுவார். திரு. வினை தீர்த்தான் செட்டியார் நாங்கள் எழுவதற்கு முன்பே அதிகாலையில் நான்கு மணிக்கே, எழுந்துகங்கையில் நீராடித் திரும்பிவிடுவார். விடுதியின் நடைமுறைச் செயல்களைக் கவனிக்க வேண்டு மல்லவா? (2) நாடோறும் முற்பகல் 9 - மணி அளவில் 16 Լ1ւգ. ஆவின்பாலையும் வேறு சில பூசைப் பொருள்களையும் எடுத்துக் கொண்டு சத்திரத்திலிருந்து மேளதாளத்துடன்