பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசியில் சில நிகழ்ச்சிகள் 301 விசுவநாதர் ஆலயத்துக்குச் செல்லும் வழக்கம் இன்றும் இருந்து வருகின்றது, இந்தக் குழுவில் சேர்ந்து கொண்டு மீண்டும் விசுவநாத ஆலயத்திற்குச் செல்வோம். இந்தக் குழுவிற்குக் காசியில் நல்ல மரியாதை இருந்து வருவதைக் கண்டு மகிழ்ந்தேன். காசியில் நான் தங்கியிருந்த நாள்களிலெல்லாம் இம்ம்ாதிரி இக்குழுவுடன் சென்று வழி படுவேன். என் மனைவி உடல் நன்னிலையிலிருந்த வரை இருவருமே இக்குழுவுடன் சேர்ந்தே செல்வோம். இராம நாத அடிகளும் இக்குழுவுடன் சேர்ந்து கொள்வார். நண் பகல் விசுவநாதரை வழிபட்ட பின்னர் அத்திருக் கோயிலுக்கு அப்பாலுள்ள விசாலாட்சித் திருக் கோயிலுக்குச் சென்று அந்த அன்னையாரையும் வழிபடு வோம். இந்த அன்னையாரின் திருவுருவம் மிகச்சிறியது: திருக்கோயிலும் மிகச் சிறியதே. "கஞ்சி காமாட்சி; காசி விசாலாட்சி; மதுரை மீனாட்சி' என்ற தொடர் களைக் கேள்வியுற்றிருக்கின்றோம் அல்லவா? காமாட்சிகண்டார் விரும்பும் (பார்ப்பவர்களை ஈர்க்கும்) கண்களை யுடையவள் (அட்சி - கண்); விசாலாட்சி - அகன்ற கண் களையுடையவள்: மீனாட்சி - மீன்வடிவம் போன்ற கண் களையுடையவள் என்ற பொருள்களையும் சிந்திக் கின்றோம்: இப்படி நானும் இராமநாத அடிகளும் பேசிக் கொண்டே வருவோம். பெயர்களின் பொருளின் அருமைப் பாட்டை எண்ணி எண்ணி மகிழ்வோம். இந்த அன்னைமார்களை வழிபடும்போது, கரணமும் தனுவும் நினக்கெனத் தந்ததேன். காளி நீ காத்தருள் செய்யே: மரணமும் அஞ்சேன்: நோய்களை அஞ்சேன்: மாரவெம் பேயினை அஞ்சேன்: حصصحصصمسسیسی ہو۔ 1. அடிகள் இப்பொழுது இல்லை. பல்லாண்டுகட்கு முன்னரே - சிவப்பேறு அடைந்து விட்டார் என்பதை நீண்ட நாட்களுக்குப் பின்னரே அறிய முடிந்தது.