பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.02 நினைவுக்குமிழிகள்-4 இரணமும் சுகமும், பழிவுநற் புகழும், யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்; சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்; தாயெனக் காத்தலுன் கடனே. எண்ணிலாப் பொருளும் எல்லையில் வெளியும், யாவுமாம் நின்றனைப் போற்றி, மண்ணிலார் வந்து வாழ்த்திலும் செறிலும் மயங்கிலேன்: மனமெனும் பெயர்கொள் கண்ணிலாப் பேயை எள்ளுவேன்; இனியெக் காலுமே அமைதியி லிருப்பேன்; தண்ணிலா முடியிற் புனைந்துநின் றிலகும் தாயுனைச் சரண்புகுந் தேனால்” என்ற பாரதியாரின் பாடல்களை இசைப்பேன். பாடல் களை நான் மனமுருகிப் பாடும்போது இராமநாத அடிகள் மெய் மறந்து நிற்பார்கள். பாடல்களைப் பாடும்போது காமாட்சி, விசாலாட்சி, மீனாட்சி என்ற மூன்று அன்னை மார்கள் என் மனக்கண்முன் சேவை சாதிப்பார் கள். இவர்களைச் சேவிக்கும் போது, நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்-அவை நேரே இன்றெனக்குத் தருவாய்-என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள்-இன்னும் முளா தழிந்திடுதல் வேண்டும்-இனி என்னைப் புதிய உயி ராக்கி-எனக் கேதுங் கவலையறச் செய்து-மதி தன்னை மிகத்தெளிவு செய்து-என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்." என்று அன்னைமார்களைப் பணிவுடன் வேண்டி நிற்பேன் 2. பா. க : மகா சக்தி பஞ்சகம் - 1, 2 3. பா. கா: யோகசித்தி (வரஸ்கேட்டல்)-5